தேவையான பொருட்கள்
கேரட் – 1 கிலோ
சுகர் - -1/2 கிலோ
பாதாம் – 12
முந்திரி - 12
ஏலம் – சிறிதளவு
நெய் – 3 மேசைக்கரண்டி
பால் - சிறிதளவு
மில்க் மெய்டு - 1/4 டின்கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் 1 மேசைக்கரண்டி நெய் விட்டு கேரட்டை சற்று வதக்கவும்.
பால் சேர்த்து வேகவிடவும்.
பாதாம், முந்திரியை முன்பே நன்கு ஊற வைத்துக் கொள்ளவும்.
அதை பால் விட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
கேரட் வதங்கவும் அரைத்த விழுதை அதில் சேர்த்து கலக்கி வேகவிடவும்.
நீர் வற்றியவுடன் சுகர் போட்டு கெட்டியாக வரும் வரைகிண்டவும்.மில்க் மெய்டு சேர்த்து அல்வா பதம் வந்தவுடன் 1 மேசைக்கரண்டி நெய்விட்டு ஏலம் போட்டு இறக்கவும்.
1 மேசைக்கரண்டி நெய்விட்டு முந்திரியை வறுத்து சேர்க்கவும். பரிமாறவும்
R.Umayal Gayathri.
Mouth Watering Halwa
ReplyDeletecolourful
ReplyDeleteVery simple to prepare and tasty too.. Tnx
ReplyDelete