Sunday, 23 March 2014

Paasi Paruppu Payasam



"பருப்பு பாயாசம்" 

தேவையானவை

பாசிப் பருப்பு  _     1/4  கோப்பை
வெல்லம் _   3/4  கோப்பை
அரிசி மாவு _ 1 தேக்கரண்டி 
பால் _ 1 லிட்டர்
ஏலக்காய் _ 2
முந்திரிப்பருப்பு _ சிறிதளவு
நெய் _ 2 தேக்கரண்டி
தேங்க்காய் _ சிறிதளவு

பாசிப்பருப்பை சற்று வறுத்துவிட்டு, குக்கரில் வேகவைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் வெல்லம் போட்டு சிறிதளவு நீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரைக்கவும்.பின் வடிகட்டிக் கொள்ளவும்.

பாலை தனியாக காய்ச்சி சற்று ஆறவிடவும். 

தேங்காய்யை பல்லு பல்லாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

பருப்பில் வெல்லக் கரைசல், நீர் விட்டு கலக்கவும். நன்கு கொதிக்க விடவும்.

அரிசி மாவை ¼ டம்ளர் நீரில் கட்டி இன்றி கலக்கி பாயசத்தை கரண்டியால் கிண்டி விட்டுக் கொண்டே ஊற்றவும். 

சிலருக்கு பாசிப் பருப்பின் தனி வாசம் பிடிக்காது.
விரும்ப மாட்டார்கள். அரிசிமாவு கலப்பதால் தனி சுவை வரும். மீண்டும் ஒரு கொதி வர வேண்டும். 

ஏலம் போடவும். 

1 தேக்கரண்டி நெய் விட்டு முந்திரியை பொன்னிறமாக வறுக்கவும். 

பிறகு 1 தே.கர. நெய் விட்டு தேங்காயையும் பொன்னிறமாக வறுத்துப்போடவும்.

பாலை பருப்புடன் கலக்கவும். 



சத்தான, சுவையான பருப்பு பாயசம் ரெடி. வேறென்ன சுவை பார்க்க வேண்டியது தான்.

இதை சூடாகவும், ஜில்லுன்னும் பரிமாறலாம்.

ஒகே ஒகே… நான் வர்றேன். நீங்கள் சுவையுங்கள்.   .   




R.Umayal Gayathri.



4 comments: