Friday, 28 March 2014

Mixed Vegetable Perattal



செட்டிநாட்டு பிரட்டல்
தேவையான பொருட்கள்
காரட் – 1 
உருளைக்கிழங்கு – 1
பீன்ஸ் – 1
பட்டாணி – 1 சிறியகோப்பை
வெங்காயம் – 1 
தக்காளி – 1
 அரைக்க தேவையானவை
தேங்காய் பூ – 5 தே.க 
வரமிளகாய் – 5
சோம்பு – ½ தே.க

பொட்டுக்கடலை – 2 தே.க

தாளிக்கத் தேவையானவை 
எண்ணெய் -  3 மே.க
கடுகு – ½ தே.க

 கேரட்,உருளைக்கிழங்கு,பீன்ஸ் இவற்றை கொதிக்கும் நீரில் அரை உப்பு சேர்த்து வேகவிடவும். அரை பதம் வெந்தவுடன் பட்டாணியை போடவும்.
 2,3 நிமிடங்கள் வேகவும். இதை தனியாக வைத்துக்
கொள்ளவும்.





தாளித்த பின் வெங்காயம் போட்டு வதக்கவும்
                                               



 

                                                  தக்காளி சேர்த்து வதக்கவும்.
                                                                                                                                                       
                                                     

 

அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போக கிண்டவும்.





 
காய்கறிகள் ,மீதி அரை  உப்பு சேர்த்து கிளரவும்.
காய்கறியில் உப்பு,காரம் சேர்ந்து கொட்டியாக வரும் போது பிரட்டல் தயார்....!


          இதோ... பிரட்டல் ரெடி.......................!!!

               சாப்பாடு  மற்றும்  சப்பாத்தி , அடைக்கு         அருமையாக இருக்கும்.                   

6 நபர்களுக்கு தாராளமாக பரிமாறலாம்.

                              Enjoy.....it........!!!
                                                                   



ஆர்.உமையாள் காயத்ரி.


3 comments: