Wednesday, 19 March 2014

"செக்கு" - கவிதை - 16

ஓம் சாய் ராம்...!!!



செக்காய் திரிவது தெரியவில்லை
கழுத்து வலி பொருக்க வழி இல்லை
விட்டால் ஓட்டம் பிடிக்கலாம்
விதி அது விடுவதில்லை...!!!

சுற்றும் செக்கின் உள் நோக்க
சிந்தனை அது உள் போகும்
எள் அது படும் பாடு....!!!
எவர்தான் இங்கே படவில்லை

நைத்தலின் நடுவில் அவன்
நாடிட உள்ளம் நினைக்கவில்லை...!
அருகில் இருந்தும் அவனைக் காண
கண்கள் அதுக்கு தெரியவில்லை...!

உள்ளே உலகம் சுற்றும் உண்மை
உணர்ந்திட ஏனோ..? வழியில்லை...
சூச்சுமம் ஒன்று சொல்லிக் கொடு
சூழ்நிலைக் கைதி என்னை கழற்றிவிடு

உன்னில் வந்த என்னில் உன்னை
காண வழி மொழிந்திடு...!
உள்பரமானந்தம் அதைப் பாட -
ஊமையாய் உதவிடு எனக்கு.



ஆர்.உமையால் காயத்ரி.

4 comments:

  1. Good Poem.......//

    ReplyDelete
  2. என் இனிய தேவகோட்டை மண்ணில் பிறந்து எஜிப்தில் வாழும் அம்மாவே தேவகோட்டையானின் வணக்கம் தேவகோட்டையின் கவிப்புகழ் அங்கும் ஒலிக்கட்டும்.
    Killergee
    www.killergee.blogspot.com

    ReplyDelete