Tuesday, 11 March 2014

Chettinad mochai curry


தேவையான பொருட்கள்


மொச்சை – ¾ உளக்கு
வெங்காயம் – 2
பச்சைமிளகாய் – 2
மிளகாய்த்தூள் – ½ தே.கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
பூண்டு சிறிய பல் - 3
இஞ்சி – ½ துண்டு

உப்பு – தேவைக்கு

கருவேப்பிலை – சிறிதளவு
கடலை மாவு - 2 மே. கரண்டி
அரிசி மாவு - 1 மே.கரண்டி

தாளிக்க வேண்டியவை
கடுகு – ¼ தே.கரண்டி
சோம்பு – ¼ தே.கரண்டி
பட்டை - 1
எண்ணெய் – 4 மே கரண்டி






தாளித்த பின் பச்சைமிளகாயைப் போடவும்.







                                                         வெங்காயம் சேர்க்கவும்.







வெங்காயம் நன்கு வதங்கிய பின்  மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும்.





மொச்சையை முத்ல் நாளே ஊறப்போடவும்.

உப்பு சேர்த்து குழையாமல் அவித்து வைத்துக் கொள்ளவும்.

பொடிகளின் பச்சை வாசனை போனபின் மொச்சையை சேர்க்கவும்.

உப்பு கொஞ்சம் போட்டு தண்ணீர் கொஞ்சம் சேர்த்து உப்பு ,காரம் மொச்சையில் சாரவிடவும்.



இஞ்சி,பூண்டை சிறிதாக நறுக்கிக் கொண்டு,இடித்து
நசுக்கிக் கொள்ளவும்.,இப்படி செய்வதால் நன்கு வாசனை வரும். இதை சேர்க்கவும்.

கருவேப்பிலை போடவும்.






கடலை மாவு, அரிசி மாவு இதை சிறிது எண்ணெய் விட்டு வருத்துக் கொள்ளவும். கடலை மாவின் பச்சை வாசனை போய்விடும். ஆறின பின் நீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். இதை ஊற்றி கிண்டவும். முதலிலேயே வறுத்து வைத்துக் கொள்ளவும்.




                   நன்கு அல்வா போல் சுருண்டு வரும் போது இறக்கவும்.



                                     செட்டி நாட்டு மொச்சைக் கறி தயார்..........!!!
                                                
                                                 அசத்தல் தான் போங்கோ....!!!
                                            

                                    உங்கள் வீட்டினருக்கும் செய்து அசத்துங்கள்.


ஆர்.உமையாள் காயத்ரி.



2 comments:

  1. அசத்தலாக நாங்களும் செய்து பார்க்கிறோம்...

    நன்றி...

    ReplyDelete