Thursday, 6 March 2014

இட்லி கவிதை - கவிதை 3



எகிப்தில் ஓர் ஏக்கம்

புளிக்காத மாவில் -

புன் சிரிப்புடன்
இட்லி…..!!!
இந்தியா என் கண்முன்னே…
நிழலாடியது

குஷ்பு இட்லியோ…..!!!
குளிரில் புளிக்க
குறைந்தது ஆகும் நாட்கள் நாலு -
குமுறினர்……..

வெயிலில் குளிர் காய்ந்து
வெந்த இட்லி இது…
வெகுதூரம் வந்த பின்னும்….
வெகுமதியாய்….!

உளுந்து அரிசியின் ஊடே – இட்டேன்
வெந்தயத்தை….
மனை அமைத்தேன்
மரியாதையாய்

இட்லி….என் முன்னே
இந்தியா கண்முன்னே.

ஆர்.உமையாள் காயத்ரி.


 

5 comments:

  1. வெயிலின் அருமை நிழலில் தெரியும்...

    ReplyDelete
  2. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவையும் தொடுத்திருக்கிறேன். காண வாரீர்......

    http://blogintamil.blogspot.in/2014/11/dh-ch.html

    நட்புடன்

    வெங்கட்.
    புது தில்லி.

    ReplyDelete
  3. வெயிலின் அருமை இட்லியில் தெரியும்

    ReplyDelete