Friday, 21 March 2014

White Peas Gravy

தேவையானவை

வெள்ளைப் பட்டாணி – ¾ கோப்பை
வெங்காயம் – 1 சிறிது
கொத்தமல்லி – சிறிதளவு
எலுமிச்சை – ½ மூடி 


தாளிக்க வேண்டியது
எண்ணெய் 1 மே.கரண்டி
கடுகு – ½ தே.கரண்டி

அரைக்க வேண்டியது
தக்காளி – 2
தேங்காய் பூ – 3 மே.கரண்டி
இஞ்சி – ½ துண்டு
பூண்டு – 3
பொட்டுக்கடலை – 1 மே.கரண்டி
சோம்பு - ½ தே.கரண்டி
மிளகாய்ப் பொடி – 1 தே.கரண்டி

பட்டாணியை முதல் நாளே ஊறப்போட்டு விடவும்.  உப்பு போட்டு வேகவைத்துக் கொள்ளவும்.

அரைக்க வேண்டியதை அரைத்துக் கொள்ளவும்.

வெங்காயம். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

தளிக்கவும்
அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போக வதக்கவும். அவித்த பட்டாணி போட்டு தேவையான நீர், உப்பு சேர்க்கவும். பட்டாணி சார்ந்து பச்சை வாசனை போன பின் வெல்லம் சேர்த்து இறக்கவும்.

சற்று ஆறின பின் வெங்காயம் கொத்தமல்லி எலுமிச்சை சேர்த்து கலக்கவும். சூடாக இருக்கும் போது சேர்த்தால் வெந்தது போல் இருக்கும். சுவை நன்றாக இருக்காது.

சாப்பிடும் போது தூவியும் ருசிக்கலாம். அவரவர் விருப்பம். 

பச்சை வெங்காயம் பிடிக்காதவர்கள் கொத்தமல்லி எலுமிச்சை மட்டும் சேர்த்துக் கொள்ளலாம்.














 R.Umayal Gayathri


No comments:

Post a Comment