Wednesday 26 March 2014

Pakoda Mor Kuzhambu

பக்கோடா மோர்க் குழம்பு



தேவையானவை 
மோர் – 1 1/4 டம்ளர்
உப்பு – தேவைக்கு
மஞ்சள் தூள் – ¼ தே.க
பெருங்காயம் – சிறிது
அரைக்க தேவையானவை
தேங்காய் துருவல் – 3 தே.க
பச்சை மிளகாய் – 2
சீரகம் – ½ தே.க
கடலைப் பருப்பு – 1 தே.க
பச்சரிசி – 1 தே.க

                    தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்






பக்கோடாவுக்கு தேவையானவை
வெங்காயம் – 1
கடலை மாவு – 5 தே.க
அரிசி மாவு – 2 தே.க
மிளகாய்த்தூள் – சிறிது
உப்பு – சிறிது
பெருங்காயம் – 1 சிட்டிகை



தண்ணீர் விட்டு மாவுக் கலவையை சற்று இளக்கமாக கலக்கிக் கொண்டு பக்கோடாவாக போட்டு எடுக்கவும்


தாளிக்க வேண்டியவை
எண்ணெய் - 1 மே.க
கடுகு – ¼ தே.க
மிளகு – ½ தே.க
சீரகம் – ¼ தே.க
வரமிளகாய் – 2
கருவேப்பிலை - சிறிது
                                   தாளிக்கவும்












அரைத்ததை ஊற்றவும்
தண்ணீர் சேர்க்கவும்.
















மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.காரம் சார்ந்து விடும்














மிதமான தீயில் ,
சற்று புளித்த  மோர் , உப்பு  சேர்க்கவும்.















பக்கோடாவை  போடவும். அடுப்பை அணைக்கவும்.
கொத்தமல்லி  போட்டுக் கொள்ளலாம்.








பக்கோடா நேரம் ஆக ஆக குழம்பில் ஊறி வரும்.

குழம்பு கெட்டியாக ஆகும். எனவே  குழம்பு செய்யும் போது சற்று நீர்க்க இருந்தால் பரவாயில்லை.


5 நபர்களுக்கு பரிமாறலாம்.


R.Umayal Gayathri.


5 comments:

  1. மிகவும் அருமை.

    ReplyDelete
  2. சூப்பர்... அடிக்கிற வெயிலுக்கும் நன்றாக இருக்கும்...

    ReplyDelete
  3. PLEASE POST MANDI RECIPE!!!

    ReplyDelete