Sunday, 25 January 2015

வெள்ளி சாமானை சுத்தம் செய்யலாமா...?

பூஜை சாமன்கள்களை ஊருக்கு போவதாக இருந்தால் சுத்தம் செய்து வைத்து விட்டு செல்வேன். இந்த தடவை மறந்தாச்சு...! அப்புறம் என்ன செய்வது....சுத்தம் செய்ய வேண்டியது தான் என்கிறீங்களா. ஆமாம்... வெள்ளி சாமான்கள்  கருத்து விடும் இல்லையா...?  இதை புளி போட்டு ரெம்ப நேரம் யார் தேய்....தேய்யுன்னு தேய்க்கிறதுன்னு என் தமக்கையின் மகள் சொல்லிய வண்ணம் முயன்று பார்த்தேன்.

அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் (கொல்கிறேன்).....ஹஹஹா...!!!இப்படி இருக்கேனா...?

அப்புறம் எப்படி ஆறேன்னு பார்க்க காத்து இருக்கீங்களா...?

சரி சரி...பாருங்க.....பாத்திரத்தில் சாமான்கள் மூழ்கும் அளவு தண்ணீர் நிரப்பிக் கொள்ளவும். 

ஒரு  A 4 sheet அளவு Foil paper யை துண்டுகளாக்கி போடவும். துணி துவைக்கும் surf powder கொஞ்சம் போடவும். நீர் நன்கு கொதிக்கவும் மிதமான தீயில் 20 நிமிடங்கள் விட்டு அடுப்பை அணைக்கவும்.
சூடு ஆறிய பின் இப்படி இருக்கும் பின் லைசாலில் சுத்தம் செய்தேன்.
இப்போ பார்க்க நன்றாக இருக்கிறது இல்லையா..?இப்படி இருந்த நான்....... எப்படி ஆகிட்டேன்...?

என்னங்க கிளம்பிட்டீங்க....ஓ...உங்க சாமானை ரெடி பண்ண கிளம்பிட்டீங்களா...ஒகே...ஒகே...அப்புறம் சொல்லுங்க என்ன சரியா...பை பை...!!!

26 comments:

 1. அட, இது நல்லாருக்கே! சுலபமாகவும் இருக்கு.

  ReplyDelete
 2. உங்கள் வலைத்தளத்தை இன்று வலைச்சரத்தில்
  அறிமுகம் செய்திருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
  பார்க்கவும்: http://blogintamil.blogspot.in/

  ReplyDelete
 3. அடடா.... எளிதான குறிப்பு... நன்றி...

  ReplyDelete
 4. வெள்ளியில் விளங்கும் பொருள்களுக்குப் புளியா?... ஆச்சர்யம்!..

  விபூதி கொண்டு துலக்குவார்களே..

  சரி.. இதுவும் புதிய தொழில் நுட்பம் தான்!.. வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. வெள்ளியில் விளங்கும் பொருள்களுக்குப் புளியா?... ஆச்சர்யம்!//

   அதிகமான கருப்பாக வெள்ளி ஆகிவிட்டால் புளி போட்டு துலக்க பளபளக்கும்.

   லேசான கருப்புக்கு - விபூதி கொண்டும் துலக்கலாம்.பற்பசை கொண்டும் துலக்கலாம்.

   Delete
 5. அட இந்த மாதிரி சமாசாரம்ன்னா எனக்கு ரொம்பவே பிடிக்குமே thanks ம்மா.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா நன்றி சகோ

   Delete
 6. மிகவும் பயனுள்ள குறிப்பு.சமையலுக்கு இடையில் இதே மாதிரி குறிப்புகளும் கொடுங்க சகோ.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக கொடுக்கிறேன் சகோ நன்றி

   Delete
 7. பயனுள்ள குறிப்பு..

  ReplyDelete
 8. அட நல்ல குறிப்பா இருக்கே...

  ReplyDelete
 9. எல்லோருக்கும் இந்திய குடியரசு நாள் வாழ்த்துகள்!

  ReplyDelete
 10. இதை பொங்கலுக்கு முன்னால் சொல்லிருக்கலாம்ல:((( so what? இனி பயன்படுத்திக்கலாம்:)) சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. இதை பொங்கலுக்கு முன்னால் சொல்லிருக்கலாம்ல//

   அடடே....தெரியாம போச்சே....நன்றி மைதிலி

   Delete
 11. கடந்த மூன்று நாட்களாக வலைப்பக்கத்திற்கு வர இயலாமல் போய்விட்டது.

  அட, இது சூப்பர் ஐடியாவாக இருக்கே

  ReplyDelete
 12. இது புது குறிப்பு. செய்து பார்க்கின்றோம். வெள்ளிக்கு புளி போட்டுத் தேய்க்கக் கூடாது. பித்தலை சாமாங்கள் மட்டுமே புளி. வெள்ளிக்கு சபீனா தெ பெஸ்ட். விபூதி கூட நல்ல பலன் தரும். விபூதி என்றால் தண்ணீர் விடாது தேய்க்க வேண்டும். சபீனா என்ரால் சிறுது தண்ணீர். தேச்த்து தேய்த்தால்பளிச்....முடிந்தால் செய்து பாருங்கள்!

  ReplyDelete
  Replies
  1. சபீனா...இங்கு கிடைக்காது சகோ. அங்கே சபீனா தான் உபயோகித்தேன்.

   வெள்ளிக்கு புளி போட்டுத் தேய்க்கக் கூடாது //

   நாங்கள் வெள்ளி - புளி சேர்த்து தேய்க்க பளபளப்பு வரும்.

   விபூதி என்றால் தண்ணீர் விடாது தேய்க்க வேண்டும்//
   ஆம் அப்படியும் செய்து இருக்கிறேன் ஊரில் ..இப்போ...விபூதி நிறைய என்னிடம் இல்லை ஆகையால்....
   .
   சபீனா என்ரால் சிறுது தண்ணீர். தேச்த்து தேய்த்தால்பளிச்....முடிந்தால் செய்து பாருங்கள்!
   ஊரில் அவ்வாறு செய்வேன்

   இங்கு இவைகள் இல்லாததால்...வேறு முயற்சியில் செய்ய வேண்டியதால் இவ்வாறு செய்தேன்.

   தங்கள் கருத்துக்களுக்கு நன்றி சகோ

   டூத் பேஸ்ட் கொண்டும்...வெள்ளியை தேய்க்க சூப்பராக இருக்கும் சகோ.

   Delete