Sunday 15 February 2015

நெல்லிக்காய் சாதம்




தேவையான பொருட்கள்
ப.அரிசி - 1 கோப்பை  ( சாதமாக வடித்து ஆறவைத்துக் கொள்ளுங்கள் )
நெல்லிக்காய் - 3 ( சிறியதாக நறுக்கிக் கொள்ளுங்கள் அல்லது துறுவிக் கொள்ளுங்கள்.)
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - ருசிக்கு
கொத்தமல்லி - 1 கைபிடி ( சிறியதாக நறுக்கிக் கொள்ளுங்கள் )

தாளிக்க வேண்டிய பொருட்கள்

எண்ணெய் - 2 மே.க
கடுகு - 1/2 தே,க 
க.பருப்பு - 3/4 தே,க
உ.பருப்பு - 1 தே.க  
நிலக்கடலை - 2 மே.க
சீரகம் - 1/4 தே.க
வரமிளகாய் - 2
கருவேப்பிலை - சிறிது

 தாளிக்கவும்
பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்





நெல்லிக்காயை சேர்த்து வதக்கவும்.






மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.



சாதத்தையும் உப்பையும்  சேர்த்து  கிளறவும். கொத்தமல்லியை சேக்கவும்.


                           சூப்பரான   ஆரோக்கியமான நெல்லிக்காய் சாதம்..........இதோ....!!!



11 comments:

  1. ஆரோக்கியமான நெல்லிக்காய் சாதம் பார்க்கவே சூப்பராகவும் சுவையாகவும் உள்ளது. பசியைத் தூண்டிவிடும் பகிர்வுக்கு நன்றிகள்.

    {சந்தித்த வேளையில் ...... சில நாட்களாக உங்களைச் சந்திக்கவே முடியவில்லையே ... நெல்லிக்காய் சாதத்தை எனக்கும் பார்ஸலாக எடுத்துக்கொண்டு வாங்கோ}

    ReplyDelete
  2. ஆரோக்கிய சாதம்! இதுவரை நெல்லிக்காய் சாதம் செய்து பார்த்ததில்லை. நிறத்தைப் பார்த்தால் எ.ப. சாதம் போல இருக்கிறது. ஒருமுறை செய்துடலாம்!

    ReplyDelete
  3. இதுவரை செய்ததில்லை... விரைவில் செய்து பார்க்கிறோம்... நன்றி சகோதரி...

    ReplyDelete
  4. இன்றைக்கு Super Market -செல்ல வேண்டியதிருக்கின்றது.

    சென்று வந்ததும் - நெல்லிக்காய் சோறு தான்!..

    ReplyDelete
  5. இந்தப் பதிவு வழக்கம் போல திறந்தாலும் - எண்ணெய்க் கத்தரிக்காய் மட்டும் திறக்கவே இல்லை. அதனை - Viva - தடை செய்திருப்பதாக வருகின்றது..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  6. வணக்கம்
    வித்தியாசமான உணவு செய்முறை விளக்கம் நன்று...த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. சாதம் சூப்பரா இருக்கு. நெல்லிக்காய் கிடைத்தால்(கண்டிப்பாக கிடைக்காது) செய்து பார்க்கலாம்.

    ReplyDelete
  8. இங்கேயும் நெல்லிக்காய் பதிவா ? அருமையான பதிவு சகோ.

    ReplyDelete
  9. நெல்லிக்காய் சாதம் யும்மி! செய்வதுண்டு. ஜீரகமும், நிலக்கடலையும் சேர்த்து இல்லை. அதையும் சேர்ஹ்ட்து செய்துடாப் போச்சு....நாக்குல தண்ணீர்!! சகோதரி மிக்க நன்றி! கணினி இன்னும் சரியாக வில்லை. வேறு கணினியிலிருந்து...எனவே கணினி கைக்குக் கிடைக்கும் போதுதான் பதிவுகள் பார்த்து அதுவும் தம்ழிஹ் இல்லைஇதில். எனவே ப்ளாகரிலிருந்து....உங்கள் சென்ற இடுகைகளையும் பார்க்கிறோம்.

    ReplyDelete
  10. வித்தியாசமாக இருக்கே...
    தமிழ் மணம் 5

    ReplyDelete
  11. நெல்லிக்காய் சாதம் வித்தியாசமாக இருக்கிறதே...

    ReplyDelete