தேவையான பொருட்கள்
பீன்ஸ் - 1/4 கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 1
கருவேப்பிலை - சிறிது
சாம்பார் பொடி - 3/4 தே,க
மிளகாய் பொடி - 1/4 தே.க
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - ருசிக்கு
தாளிக்க வேண்டியது
எண்ணெய் - 2 மே.க
கடுகு - 1/4 தே.க
க.பருப்பு - 1/2 தே.க
உ.பருப்பு - 1/4 தே.க
சீரகம் - 1/4 தே,க.
தாளிக்கவும்
வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
தக்காளி ,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
பீன்ஸைப் போட்டு, உப்பு போட்டு வதக்கவும். மூடி போட்டு வைத்திருந்தால் சீக்கிரமாக வெந்து விடும். தண்ணீர் தேவையில்லை.
மூடுவதால் அந்த ஆவிநீரிலேயே வெந்து விடும்
பொடிகளைப் போட்டு வதக்கவும்.
காயில் சாரவும் அடுப்பை அணைக்கவும்.
தயாராகிவிட்டது
பீன்ஸ்.....பொரியல் தயாராகிவிட்டது.
பீன்ஸை நேராக வகுந்து நறுக்குவதால்.....இப்பொரியலின் சுவை நன்றாக இருக்கும்.
எங்கள் வீட்டில் பீன்ஸை தனியாகவும், தேங்காய்த் துருவல் மட்டும் போட்டும் மட்டுமே செய்கிறார்கள் சகோ..கொஞ்சம் என் பாஸ் கிட்ட சொல்லுங்களேன். :))))))))
ReplyDeleteகுறித்துக் கொண்டேன்.
:))))))....நன்றி சகோ
Deleteருசித்தோம்.
ReplyDeleteநன்றி ஐயா
Deleteபடத்துடன் விளக்கம் செம... நன்றி...
ReplyDeleteஅப்புறம் சொல்ல மறந்துட்டேன்... நேற்றைய பொங்கல் நல்லாயிருந்தது...
நன்றி சகோ
Deleteஅப்புறம் சொல்ல மறந்துட்டேன்... நேற்றைய பொங்கல் நல்லாயிருந்தது...
:))))
எனக்குப்பிடித்த பீன்ஸுக்காக தமிழ் மணம் 4
ReplyDeleteநன்றி சகோ
Deleteநானும் கவனித்துக் கொண்டே வருகின்றேன்.,
ReplyDeleteசெய்முறையின் ஒவ்வொரு நிலையையும் படம் எடுத்து - பதிவில் தருவது அருமை!..
பதிவின் மீது தங்களது அக்கறையை மனதார பாராட்டுகின்றேன்.. வாழ்க நலம்!..
சிறந்த வழிகாட்டல்
ReplyDeleteதொடருங்கள்
பீன்ஸ் பொரியல் அட்டகாசம். நீங்க மிளகாய்பொடி என்று சொல்வது தனிமிளகாய் பொடியையா?
ReplyDelete-நன்றி உமையாள்-
ஆம் தனி மிளகாய் பொடியை தான்
Deleteநன்றி சகோ
செய்துபார்க்கிறேன். ஒரே மாதிரி செய்து செய்து பேரடிக்குது. படம் அருமையாக உள்ளது.
ReplyDeleteநன்றி சகோ
Deleteபீன்ஸ் பொரியல் மிக அருமை சகோ.
ReplyDeleteபீன்ஸ் பொடிப்பொடியாக நறுக்கப்பட வேண்டும். எங்கள் வீட்டில் அப்படித்தான் செய்வோம். நான் தான் அநேகமாக எல்லாக்காய்கறிகளை பொடிப்பொடியாக கத்தியால் நறுக்கிக் கொடுத்து உதவுவேன்.
ReplyDelete>>>>>
பீன்ஸை பொடியாக நறுக்கியும் செய்வோம்.
Deleteஆஹா.......நன்றி...ஐயா
பீன்ஸ்ஸைப் பொடிப்பொடியாக நறுக்கி கறி செய்து, தேங்காயை நிறைய துருவி அதன் தலையில் போட்டு, ஜோராகச் சாப்பிட வேண்டும். :)
ReplyDelete>>>>>
இது போலும் நாங்கள் செய்து ஜோராக சாப்பிடுவோம் ஐயா :)
Deleteஇங்கு படத்தினில் தங்களால் காட்டியுள்ள பீன்ஸ் முழுப் பச்சைமிளகாய்கள் போல உள்ளன. இதெல்லாம் சரிப்பட்டு வராது.
ReplyDelete>>>>>
ஆம் நறுக்குபவர்களுக்குத் தானே அந்த கஷ்டம் தெரியும்....:))))))
Deleteமேலும் பீன்ஸ் இல் பருப்பு உசிலி செய்தால் மிகவும் டாப்பாகவும் டேஸ்டாகவும் இருக்கும்.
ReplyDelete>>>>>
ஆம் பருப்பு உசிலியும் செய்வோம் ஐயா...அதன் சுவை தனி தான்.
Deleteபீன்ஸ், கொத்தவரங்காய் + வாழைப்பூ ஆகியவை பிறவி எடுத்துள்ளதே பருப்பு உசிலி செய்ய மட்டுமே. :)
ReplyDeleteஎனினும் பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
அன்புடன் VGK
பீன்ஸ், கொத்தவரங்காய் + வாழைப்பூ ஆகியவை பிறவி எடுத்துள்ளதே பருப்பு உசிலி செய்ய மட்டுமே. :)
Delete:)))))))).......
மிக்க நன்றி ஐயா
பீன்ஸ் இப்படிச் செய்து சாதத்திற்கு சைட் டிஷ் அல்லாமல் சாதத்துடன் கலந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.....சில சமயம் அப்படியும் செய்வதுண்டு.....வாழைப்பூவையும் இப்படிச் செய்வதுண்டு....உங்கள் செய்முறையும், படங்களும் நாவில் நீர் சுரக்க வைக்கிறது....ம்ம்ம்யும்மி......
ReplyDeleteஇது நல்லா இருக்கே! இது போல் செய்து பார்க்கலாம்.
ReplyDeleteநன்றி சகோஸ்
ReplyDeleteநன்றி அம்மா
Delete