Friday, 27 February 2015

உலகம் உருண்டை தானே...?!!!





சக்கரைக்கட்டி ஒன்றை
விட்டுவிட்டேன்
வீழ்ந்ததென்று


தவம் செய்தது
அது

என்னை -  நீ
தனியே விட்டதினால்
என்றது

பொறுக்காத எறும்புகள்
சில நேரத்திலேயே...
படையெடுத்தன
அதனைநோக்கி...

உலகம் உருண்டை என்றது
அது என்னை நோக்கி...
விருந்தாகிப் போகிறேன்
விரைந்து என முகம் மலர்ந்தது...

எறும்புகளின் சுற்றத்தார்களே
என்னையும் ஒரு நாள்
விருந்தாக்கிக் கொள்வர் அன்றோ...?

உலகம் உருண்டை தானே...?!!!


37 comments:

  1. இறப்பின் தத்துவத்தை இனிப்பாக சொன்ன கவிதை!
    சர்க்கரை போல் இனித்தது சகோதரி!
    ஆம் உண்மைதான்
    உருண்டைதானே உலகம்!

    நன்றியுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. இறப்பின் தத்துவத்தை இனிப்பாக சொன்ன கவிதை!
      சர்க்கரை போல் இனித்தது//

      இயல்பாய் எடுத்து கொண்டு இருக்கிறீர்கள்..சகோ நன்றி

      Delete

  2. ஆழமான கருத்துடைய
    அற்புதமான உவமைக் கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆழமான கருத்துடைய
      அற்புதமான உவமைக் கவிதை//

      மிக்க நன்றி ஐயா

      Delete
  3. உலகம் உருண்டை தான்..

    அதில் சந்தேகமே இல்லை!..

    ReplyDelete
    Replies
    1. ஆம் சந்தேகமே இல்லை தான் நன்றி ஐயா

      Delete
  4. விபரீதக் கவிதை!

    :)))))

    ReplyDelete
    Replies
    1. இயல்பான ஒன்று தானே...? சகோ

      :)))))..........

      Delete
  5. அர்த்தமுள்ள கவிதை கொஞ்சம் விபரீதமாதவும்...
    தமிழ் மணம் 5

    ReplyDelete
    Replies
    1. உலகம் உருண்டை என்பது போல் இதுவும் சாதாரண ஒன்று தானே...? சகோ நன்றி.

      Delete
    2. உலகம் உருண்டை என்பது போல் இதுவும் சாதாரண ஒன்று தானே...? சகோ நன்றி.

      Delete
  6. அட ஆமாம்! எல்லோருமே ஒரு நாள் அப்படித்தானே!

    அருமையான வரிகள்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சரி தான்...நன்றி சகோ

      Delete
  7. கவிதையின் கருத்து மிக அருமை சகோ.

    ReplyDelete
  8. அர்த்தமுள்ள கவிதை...
    கொஞ்சம் இனிப்பு கலந்து...
    அருமை...

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோ இனிப்பு கலந்து....தான் நன்றி

      Delete
  9. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. அந்த எறும்புகள் ,சர்க்கரை நோயால் இறந்தவரின் உடலை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் சாப்பிடுமோ:)
    த ம 7

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹ......ஹா...அட டக்குன்னு இப்படி தோணி இருக்கே...நல்லா விருந்து தான் அவைகளுக்கு...:)))))...... நன்றி ஐயா

      Delete
  11. வித்தியாசமான பாணியில் மனதைத் தொடும் கவிதை.

    ReplyDelete
  12. எல்லாவற்றிலும் நாம் விட்ட இடத்திலிருந்தே மீண்டும் தொடங்குவோம் - என்ற மெய்ப்பொருளை விளக்கும், உலகம் உருண்டைதான் என்ற தத்துவத்தை விளக்கும் அழகிய வரிகள்.
    வாழ்த்துக்கள், வாழ்வதற்கு.
    த.ம.9

    ReplyDelete
  13. உண்மைதான்,
    வீழ்ந்ததாய் நீங்கள் விட்டுச்சென்ற சக்கரைக் கட்டி, எறும்புகளுக்கு மட்டும் உணவாக வில்லை.
    அது ஒரு கவிதையையும் தந்து எண்ணற்ற கண்களுக்கு விருந்தாகி இருக்கிறது.
    தங்களுடைய பதிவுகளைத் தொடர்ந்தே வருகிறேன் கவிஞரே!
    சமையல் இடுகைகளில் நுட்பம் தெரியாததால் ( உண்டால் தெரியும்....கண்டால் தெரிவதில்லை ) கருத்திடுவதில்லை . அவ்வளவே!
    தாம் விருந்தாக முகம் மலரும் சக்கரைக் கட்டியைப் பார்க்கும் போது,

    மார்பில் வேலேற்று மலர்ந்த முகத்துடன் தங்களது உடலைப் பருந்திற்கும் கழுகிற்கும் தின்னக் கொடுத்துக் கிடக்கும் போர்வீரர்களைக் கண்டு,

    பருந்தினமும் கழுகினமும் நெருங்கி உண்ணப்
    பதுமமுகம் மலர்ந்தோரைக் காண்மின்! காண்மின்!!

    என ஜெயங்கொண்டான் பரணி பாடியது நினைவுக்கு வந்தது.

    அருமை !

    தொடர்கிறேன்.

    உலகம் உருண்டைதான்!


    த ம 10

    ReplyDelete
    Replies
    1. இன்று சக்கரை கட்டி நாளை நான் என்ற நிலையாமையை உணர்த்தும் கவிதை அருமை! என்றேனும் ஒரு நாள் சக்கரை கட்டி போல், எறும்புக்கு விருந்தாவோம்; மலர்ந்த முகத்துடன் ஆவோமா என்பது தான் சந்தேகம். பாராட்டுக்கள் காயத்ரி!

      Delete
    2. வீழ்ந்ததாய் நீங்கள் விட்டுச்சென்ற சக்கரைக் கட்டி, எறும்புகளுக்கு மட்டும் உணவாக வில்லை.
      அது ஒரு கவிதையையும் தந்து எண்ணற்ற கண்களுக்கு விருந்தாகி இருக்கிறது.//

      சக்கரைக் கட்டி விழவில்லை....கவிதை எழுதி நாட்கள் ஆகிவிட்டன என கணினி முன் அமர்ந்த போது...... மனதில் தோன்றிய கவிதை இது. அப்படியே உடனே..பதிவிட்டு விட்டேன். சில சமயங்களில் எதுவும் எழுதத்தோன்றாது எழுத அமர்ந்தால் வரவும் வராது. அது வரும் போதே எழுதி வைக்க வேண்டும் எனக்கு....

      தங்களுடைய பதிவுகளைத் தொடர்ந்தே வருகிறேன் கவிஞரே!//

      கவிஞரா....? அப்படி எல்லாம் சொல்லாதீர்கள் சகோ. அந்த அளவுக்கு என்னிடம் எதுவுமே ..... இல்லை. ஏதோ வந்ததை எழுதிக் கொண்டு இருக்கிறேன் அவ்வளவே.

      நன்றி சகோ

      Delete
    3. இன்று சக்கரை கட்டி நாளை நான் என்ற நிலையாமையை உணர்த்தும் கவிதை அருமை! என்றேனும் ஒரு நாள் சக்கரை கட்டி போல், எறும்புக்கு விருந்தாவோம்; மலர்ந்த முகத்துடன் ஆவோமா என்பது தான் சந்தேகம். பாராட்டுக்கள் காயத்ரி!//

      நன்றி அக்கா

      Delete
  14. ஆமாம் இந்த உலகமும் உருண்டைதான்......

    ReplyDelete
  15. அர்த்தம் பொதிந்த கவிதை.....

    பாராட்டுகள்.

    ReplyDelete
  16. வணக்கம் சகோதரி,!

    கவிதை அற்புதம். உலகம் உருண்டைதான்! எங்கு தொடங்குகிறோமோ, அங்கு வந்துதான் ஒருநாள் சேர வேண்டும் என்ற பொருளை உணர்த்தியது தங்கள் கவிதை.! பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  17. எறும்புகளுக்கான சர்க்கரைக்கட்டி போலவே, திருமதி. கலையரசி அவர்களின் விளக்கம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. எழுதிய தங்களுக்கும், விளக்கம் அளித்துள்ள அவர்களுக்கும் என் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள் + நன்றிகள்.

    ReplyDelete