Friday, 6 February 2015

வாழ்க வாழ்க சாயின் நாமம்





என் உள்ளும் வெளியும் சுவாசம் ஆனாய்
என் அகமும் புறமும் பார்வையானாய்
என் சிந்தை நீயே செயலும் ஆனாய்
என் நோயும் நீயே மருந்தும்  ஆனாய்

என் காவல் தெய்வம் நீயே ஆனாய்
என் நடத்தை நீயே கூட்டிப் போனாய்
என் எழுத்தும் நீயே பாட்டாய் ஆனாய்
என் மன ஆனந்தம் நீயே ஆனாய்

என் ஏக்கம் நீயே தொலைவு ஆனாய்
என் பசியும் நீயே சோறும் ஆனாய்
என் தேவை என்ன நீயே அறிவாய்
என்ன வேண்டும் நீயே தந்தாய்

வாழ்க வாழ்க சாயின் நாமம்
வாழ்க வாழ்க சாயின் ரூபம்
வாழ்க வாழ்க சாயின் அருள்மழை
வாழ்க வாழ்க அனைத்தும் வாழ்க (4)


மீண்டும் பாடல் தந்த  சாயே நீ வாழ்க.

படம் முகநூல் நன்றி

6.2.2015 - இன்று சுப்பு தாத்தா அவர்கள் வாழ்க வாழ்க சாயின் நாமம் என்னும் இந்தப்பாடலை பாடி யூ டியூபில் பதிவு செய்து இருக்கிறார்கள்.  
லிங்க் -  https://www.youtube.com/watch?v=ioP9XZrRgiU





ஐயா...கேட்க கேட்க...ஆனந்தமாக இருக்கிறது. மிக்க நன்றி ஐயா.சாய் 

நாதருக்கு ஜெய்...!!! 






14 comments:

  1. சாயி நாமம் சொல்லும் போதே
    சங்கடம் தீர்ந்திடுமே எம்சிந்தையில்
    அமர்ந்து கொண்டே அவரும் விந்தைகள்
    புரிவாரே நித்தம் வந்து சித்தம்
    எல்லாம் நிறையச் செய்வாரே
    சாயி நாமம் சொல்லச் சொல்ல
    சக்திகள் யுக்திகள் பெருகிடுமே
    நல் சந்ததி வழிவழி கண்டிடுமே

    அருமை அருமை வாழ்த்துக்கள் தோழி ....!

    ReplyDelete
  2. சாயின் மீதான புகழ் மாலை அருமையாக உள்ளது. நன்றி.

    ReplyDelete
  3. வணக்கம்
    சாயிபாபா பற்றிய பாடல் மிக அருமையாக உள்ளதுஇரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. மரபு எவ்வளவு இனிமையானது என்பதற்கு உங்களின் இந்தக் கவிதை ஒரு சான்று.
    நன்றி சகோதரி!
    த ம 4

    ReplyDelete
  5. சாயிராம்...சாயிராம்...

    ReplyDelete
  6. சாயி பாமாலை அருமை
    தமிழ் மணம் 5

    ReplyDelete
  7. சாயிநாதனின் புகழ்மாலை அழகு.. அருமை!..

    சாய்நாதா சரணம்.. சரணம்!..
    சற்குருநாதா சரணம்.. சரணம்!..

    ReplyDelete
  8. மேடம்,
    உங்களது இந்தப் பாடலை நான் ஹிந்தோள ராகத்தில் பாட முயற்சி செய்து இருக்கிறேன்.
    பாட அதை யூ ட்யூபில் போட உங்கள் அனுமதியை எதிர்பார்க்கிறேன்.
    சாய் அருளினால், சிறிது நேரத்தில், லிங்க் தருகிறேன்.

    சுப்பு தாத்தா.
    www.menakasury.blogspot.com
    www.subbuthatha.blogspot.com
    www.pureaanmeekam.blogspot.com
    www.movieraghas.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. ஐயா...தாராளமாக போடுங்கள் ....பாடலை கேட்க ஆவலுடன் இருக்கிறேன். சாய் சரணம்.சாய் சரணம் சாய்சரணம்...

      Delete
  9. ஜெய் சாயி ராம்! அருமையான பாடல்! நன்றி!

    ReplyDelete
  10. பாட்டின் வரிகள் அருமை,குறித்து கொண்டேன். எனக்கு தெரிந்தமெட்டில்வியாழக்கிழமைகளில் பாட ///

    நன்றி ஆன்ட்டி
    வாழ்க வளமுடன் ..

    ReplyDelete
  11. ஓம் சாயிஸ்ரீ
    சாயி
    ஜெய ஜெய சாயி.......

    -*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

    இங்கேயும் வருகை தாருங்கள்......

    www.jokkiri.blogspot.com

    டேபிளார்
    http://jokkiri.blogspot.ae/2015/02/blog-post.html

    ReplyDelete