Sunday, 15 February 2015

எண்ணெய் கத்தரிக்காய் - 1





தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் - 1/4 கிலோ

மிளகாய்ப் பொடி - 3/4  தே.க
மல்லித்தூள் - 1 1/2  தே.க
சாம்பார் பொடி - 3/4   தே.க
மஞ்சள் தூள் - சிறிது
பிரட் தூள் - 3 தே.க
உப்பு - ருசிக்கு


தாளிக்க வேண்டியது 

எண்ணெய் - 5 மே.க
கடுகு - 1/4 தே.க
உ.பருப்பு - 1/2 தே.க
சோம்பு - 1/4 தே.க

                                                  தாளிக்கவும்






கத்தரிக்காய்களை சேர்த்து + உப்பு வதக்கவும்.







பிரட் தூளை தனியாக வைத்துக் கொண்டு மற்றவற்றை கலந்து வைத்துக் கொள்ளுங்கள்



காய்கள் முக்கால் பதம் வேகவும் கலக்கிய மிளகாயப் பொடியைக் கலவைவை சேர்க்கவும். அது நன்கு சேர்ந்த பின்



பிரட் தூளை சேர்த்து கிளறவும்.காய் குழையக் கூடாது. பதமாக வெந்து இருக்க ருசி கூடுதலாக இருக்கும்.


                              வெங்காயம் தக்காளி இல்லாத எண்ணெய் கத்தரிக்காய்...!!!!




13 comments:

  1. இதுவரை அறிந்திராத புதுமாதிரியாக உள்ளதே. செய்துபார்க்கிறேன். நன்றி உமையாள்.

    ReplyDelete
  2. வணக்கம்

    சுவையான உணவு.. செய்முறை விளக்கம் நன்று... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. பிரட் தூளை சேர்த்து விடுகிறோம்... நன்றி...

    ReplyDelete
  4. மிகச் சாதாரண கத்திரிக்காய் தங்களின் பதிவினில் ஏறியதும் கலர் கலராக மினுமினுப்புடன் ஜொலிக்க ஆரம்பித்துள்ளது. புதியதோர் செய்முறை வழிகாட்டலுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. கையை நீட்டி என்னை அறியாமல் படத்திலிருந்து எண்ணெய்க் கத்தரிக்காயை எடுக்க முயல்கிறேன்.. எனக்கு மிகவும் பிடித்த பண்டம். ஆனால் சோம்பு போடாமல் செய்வோம்!

    ReplyDelete
  6. புதிதாக இருக்கு குறிப்பு. செய்துபார்க்கிறேன் உமையாள்.

    ReplyDelete
  7. காதலர் தினத்தன்று இதை நீங்கள் போட்டிருப்பது பொருத்தமே ,காதலாவது கத்தரிக்காயாவது என்றுதானே கூறுவார்கள் ?:)
    த ம 5

    ReplyDelete
  8. எனக்கு பிடித்தமானது K. காய்.
    தமிழ் மணம் 6

    ReplyDelete
  9. கத்தரிக்காய் எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களுடைய எண்ணெய் கத்தரிக்காய் செய்முறை மிக அருமை. என்னுடைய இன்றைய பதிவு நெல்லிக்காய் ஜாம். உங்கள் கருத்து எனக்கு மிகவும் அவசியம்.

    ReplyDelete
  10. கத்திரிக்காய் எனக்கு ரொம்ப பிடிக்கும்,பெரும்பாலும் கத்திரிக்காயில் புளிக்குழம்பு தான் செய்வேன்,இந்த செய்முறை புதிதாக உள்ளது,கத்திரிக்காய் வாங்கி செய்திட வேண்டியதுதான்...

    வாழ்க வளமுடன் ...

    ReplyDelete
  11. அடிக்கிற வெயிலுக்கு பழைய சாதம் கொஞ்சம் தண்ணி ஊத்தி வச்சிருக்கேன். அதுக்கு தொட்டுக்க ரெண்டு துண்டு எண்ணெய் கத்திரிக்காய இப்படி தள்ளி விடுங்க. பாக்கவே சூப்பரா இருக்கு.

    ப்ரெட் தூள் & சோம்பு தவிர்த்து நிறைய பூண்டு சேர்த்து செய்து கத்தரிக்காய் பொரியல்னு சொல்லிடுவோம்.

    ReplyDelete
  12. ப்ரெட் தூள் சேர்த்து செய்தது இல்லை...இது புதுசா இருக்கு கண்டிப்பா செய்துடுவோம் நாளையே.....

    ReplyDelete
  13. ப்ரெட் தூள் சேர்ந்து அருமையாக இருக்கும் கண்டிப்பாய் செய்து பார்க்க வேண்டும்..

    ReplyDelete