தேவையான பொருட்கள்
சோள ரவை - 1 கோப்பை
(corn meal)
கேரட் - 1
பீன்ஸ் - 7
வெங்காயம் - 1
பூண்டு - 5
இஞ்சி - சிறிது
பட்டாணி - 1 கை
சோள ரவையை வறுத்து வைத்துக் கொள்ளவும். சற்று நேரம் ஆகும்.
தாளிக்க வேண்டியது
எண்ணெய் + நெய் - 3 மே.க
பட்டை - 1/2
ஏலம் - 1
கிராம்பு - 1
பிருஞ்சி இலை - 1/2
கல்பாசி - 1/2 பூ
(black stone flower)
முந்திரி - 5
தாளிக்கவும்
இஞ்சி சேர்த்து வதக்கவும்.
பூண்டை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம்,பச்சைமிளகாயை சேர்த்து வதக்கவும்.
காய்களை சேர்த்து வதக்கவும்.உப்பு போடவும்.
2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். காய்கள் 3/4 கால் பதமாக வெந்த பின்
ரவை சிறிது சிறிதாக சேர்த்து கவிவிடாமல் கிளறவும். அப்போது தான் கட்டி படாமல் இருக்கும்.
மூடி வைத்து சற்று விட்டு விட்டு அடி புடிக்காமல் கிளறவும்.
பிரியாணி மணத்துடன் கூடிய உப்புமா தயாராகி விட்டது. இதை உப்புமான்னு சொல்வதா...? இல்லை பிரியாணின்னு சொல்வதா...? என்ற குழப்பம் எனக்கு...
அதை என்னவரிடம் கேட்ட போது அவர் வைத்த பெயர் தான் பிருப்புமா...அப்படின்னு இதற்கு நாமகரணம் செய்தோம்.
//அதை என்னவரிடம் கேட்ட போது அவர் வைத்த பெயர் தான் பிருப்புமா...அப்படின்னு இதற்கு நாமகரணம் செய்தோம்.//
ReplyDeleteஅழகான நாமகரணம். பாராட்டுக்கள்.
தமிழ் + இங்கிலிஷ் = தங்கலீஷ் போல :) உள்ளது.
நாமகரணம் என்ற இதைப்படித்ததும் என்னுடைய குட்டியூண்டு கதை ஒன்று நினைவுக்கு வந்தது. http://gopu1949.blogspot.in/2011/10/blog-post.html ‘பெயர்ச்சூட்டல்’
அன்புடன் VGK
தமிழ் + இங்கிலிஷ் = தங்கலீஷ் போல :) உள்ளது.//
Deleteபிரியணி + உப்புமா = பிருப்புமா என வைத்தார். இது முற்றிலும் தமிழ் பெயர் தான்,
வருகிறேன் ஐயா குட்டியூண்டு கதை படிக்க
இது ரவைபோல் இருக்குமா உமையாள். புதுப்பெயருடன் நல்லதொரு குறிப்பு.
ReplyDeleteஇது ரவைபோல் இருக்குமா//
Deleteஆம் பிரியசகி..நன்றி
பிரியாணி பாதி
ReplyDeleteஉப்புமா பாதி
கலந்து செய்த கலவை நான்!
" பிருப்புமா"
வீட்டிற்கு!
உள்ளே! வெளியே!
எவரும்
விரும்பி உண்ணும்!
"உமையாள்" செய்த
உயர்ந்த உணவு
நான்
" பிருப்புமா"
நன்றியுடன்,
புதுவை வேலு
பிரியாணி பாதி
Deleteஉப்புமா பாதி
கலந்து செய்த கலவை நான்!
" பிருப்புமா"//
ஆம் சூப்பர் சகோ
ஜோராக இருக்கு.
ReplyDeleteசோள ரவை வாங்கி செய்து பார்க்கிறோம்... "விருப்ப மா" என்றும்....!
ReplyDeleteவிருப்ப மா..என்று பின் வந்து சொல்லுங்கள் சகோ
Deleteநம்ம ஊரை விட - சில விஷயங்கள் இந்த அரபு நாடுகளில் தாராளம்!..
ReplyDeleteஅதில் ஒன்று - இந்த சோள ரவா (Semolina).
சிறு வயதிலிருந்தே பாரம்பரிய உணவுகளில் நாட்டமுள்ள எனக்கு - சோள ரவா மிகவும் பிடித்தமான ஒன்று!..
பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் - உறைநிலையிலுள்ள பட்டாணி, பீன்ஸ், கேரட் இவைகளுடன் அதிகபட்சம் 10 நிமிடங்கள் தான்!..
நிறைந்த நலன்களைக் கொடுக்கும் சோள உப்புமா! (பிருப்புமா!..)
சரி.. பேரெல்லாம் வெச்சதுக்கு பார்ட்டி ஒன்றும் கிடையாதா!?..
இந்த சோள ரவா (Semolina).//
Deleteஇது கான் மீல் ரவை. செமோலினா ரவை யில்லை.
பார்ட்டி வைத்துவிட்டால் போச்சு ஐயா
நானும் செய்து பார்த்து சொல்கிறேன். வாழ்த்துகள்.
ReplyDeleteபின் சொல்லுங்கள் மகேஷ்வரி
Deleteபிரியுப்பாணி,உப்புமாணி!
ReplyDelete)))))....???
Deleteவணக்கம்
ReplyDeleteநிச்சயம் செய்து பார்க்கிறோம் அதைப்போன்ற பதத்துக்கு வரும்மா என்ற சந்தேகம். பகிர்வுக்கு நன்றி த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கண்டிப்பாக வரும்!.. பயப்படாமல் செய்து சுவையுங்கோள்!..
Deleteநன்றாக வரும் சகோ... ஐயாவே சொல்லி விட்டார்கள்...நன்ரி ஐயாவிற்கு
Deleteவாங்கி வைத்த சோள ரவையை(என் கணவர் சொல்லி வாங்கினேன்) ஒருமுறை உப்புமா செய்து சொதப்பிட்டேன்,எப்படி,என்ன செய்றதுனு தெரியாம இருந்தேன்,புது ரெசிபி சொல்லி கலக்கிட்டிங்க ஆன்ட்டி...
ReplyDeleteஅதன் பெயரும் சூப்பர்!!!!!
நன்றி
வாழ்க வளமுடன்...
இப்போ செய்து பார் சரிதா....நன்றி
Deleteஇதுவும் செய்ய பார்க்க ''விருப்பமா'' கத்தான் இருக்கு
ReplyDeleteதமிழ் மணம் 3
இதுவும் செய்ய பார்க்க ''விருப்பமா'' கத்தான் இருக்கு//
Deleteஅப்போ விரைவில் செய்து விடுவீர்கள் இல்லையா சகோ
புதிய பெயரில் பிருப்புமா.... விருப்பமா இருக்கே அக்கா....
ReplyDeleteசெய்து பாருங்கள் சகோ
Deleteருசித்தோம்.
ReplyDeleteநன்றி ஐயா
Deleteபெயரும், செய்முறையும் வித்தியாசமாக இருக்கே ! கண்டிப்பாக செய்வேன்.
ReplyDeleteஎனது நேற்றய பதிவு அபியும் நானும் !!!
நன்றி
Deleteவந்து பார்த்தேன் சகோ
வணக்கம் சகோதரி.!
ReplyDeleteஅருமையான, அழகான செய்முறை படங்களுடனும் புதிய பெயருடனும், சிற்றுண்டி.! செய்தாலும், சுவைத்தாலும் அருமையாகத்தான் இருக்கும். இதை எங்களுடன் தாங்கள் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சகோதரி.!
நான் இங்கில்லாத போது, என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி, சிறப்பித்தமைக்கும் என் தாமதமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் சகோதரி.! ( தாமதத்திற்கு மன்னிக்கவும்.) அதன் காரணங்களை என் புதிய பதிவில் தெரிவித்துள்ளேன்.என் தளத்திற்கு வருகை தந்து கருத்திட்டால் மகிழ்வடைவேன். நன்றி.!
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
மிக்க நன்றி சகோ
Deleteவந்து பார்த்து கருத்திட்டு வந்தேன் சகோ.
Corn Meal Birpuma எனத் தலைப்பு
ReplyDeleteஆங்கிலம் ஆகியிருப்பினும்
பிருப்புமா ஆக்கி உண்ண
தாங்கள் வழங்கியது
சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்
ஹஹஹ நாமகரணம்! சூப்பர்....
ReplyDeleteகார்ன் மீல /சோள ரவை/பன்சி ரவை இங்கு அதுதானே....?? செய்திருக்கிறோம்....ஆனால் மசாலா சேர்த்து அல்ல...இப்படியும் செய்துவிட்டால் போச்சு....பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி!
மிக்க நன்றி சகோஸ்
Deleteபிருப்புமா. அருமையான பெயர். அருமையான ரெசிபி.
ReplyDeleteநன்றி அம்மா
Delete