தேவையான பொருட்கள்
ப.அரிசி - 1 கோப்பை
து.பருப்பு - 1/4 கோப்பை
வெங்காயம் - 1
கருவேப்பிலை - சிறிது
உப்பு - ருசிக்கு
நெய் - 1 தே.க
தேங்காய் துறுவல் - 3 மே.க
இவை இரண்டையும் மிக்ஸியில் போட்டி சற்று கொரகொரப்பாக உடைத்துக் கொள்ளவும்.
( மாவு மிஷினிலும் கொடுத்து மொத்தமாக உப்புமாவாக உடைத்து
வைத்துக் கொள்லலாம் வேண்டும் போது எளிதாக இருக்கும் )
தாளிக்க வேண்டியவை
நல்லெண்ணெய் - 3 மே.க
கடுகு - 1/4 தே.க
உ பருப்பு - 3/4 தே.க
சீரகம் - 1/4 தே,க ( வேண்டுபவர்கள் சேர்த்துக் கொள்ளலாம்)
வரமிளகாய் - 2
தாளிக்கவும்.
வெங்காயம் + கருவேப்பிலையை
சேர்த்து வதக்கவும்.
.
உப்புமா உடைத்ததைப் போடவும்.
சற்று வறுக்கவும் .
2 1/2 கோப்பை தண்ணீர் ஊற்றவும்.
உப்பு சேர்க்கவும். குக்கரில் வைத்தால்
பிரசர் வந்த பின் மிதமான தீயில் 3 நிமிடங்கள் விட்டு அடுப்பை அனைக்கவும்.
பிரசர் ஆறிய பின் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.
உப்புமா.....ரெடி...!!!
ஆஹா அரிசியிலே உப்புமா,,,
ReplyDeleteதமிழ் மணம் 1
உடனடி வருகைக்கும் , வாக்கிற்கும் நன்றி சகோ.
Deleteஆஹா, இப்போ நேற்று இரவு எங்கள் வீட்டிலும் அரிசி உப்புமா தான் ! தங்களின் படங்களும் பக்குவமும் அருமை. பாராட்டுக்கள்.
ReplyDeleteஆஹா...நீங்க அரிசி உப்புமா...சாப்பிட்டு இங்கு வந்தால் அதேயை நானும் போட்டி இருக்கிறேன் .
Deleteபாராட்டுக்கு நன்றி ஐயா
looks yummy ..thanks for the recipe..
ReplyDeleteநன்றி ஏஞ்சலின்
Deleteஅரிசியிலேயே உப்புமாவா! சாப்பிட்டதே இல்லை. செய்முறையும் படமும் அழகா இருக்கு... விதவிதமா நீங்க செய்றத போட்டோவ பார்த்து பார்த்து ஏங்க வேண்டியதுதான்.
ReplyDeleteஅடடா...ஒரு முறை செய்து சப்பிட்டுப் பாருங்கள் சகோ
Deleteஐ... குருணை உப்புமா! ஆனால் இதில் வெங்காயம் சேர்த்துச் செய்ததில்லை. அதையும் முயற்சித்து விடுவோம்.
ReplyDeleteநன்றி ஶ்ரீராம்
Deleteஅரிசி உப்புமாவை எடுத்து சாப்பிடணும் போல இருக்கு.
ReplyDeleteபார்சல் அனுப்புகிறேன் சகோ
Deleteருசித்தோம்.
ReplyDeleteஅரிசி உப்புமா எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யப்படும் டிஃபன் வகைகளில் ஒன்று . உங்கள் விளக்கத்தை வைத்து நாங்கள் கூட செய்து விடலாம் போல இருக்கிறதே
ReplyDeleteநீங்களே செய்யலாம் தான், வெகு சுலபமானது தான்
Deleteபிரிண்ட் எடுத்து வீட்டில் கொடுத்து விட்டேன்... எப்போது செய்வார்களோ...?
ReplyDeleteநன்றி சகோதரி...
உடனேயே செய்து விடுவார்கள் சகோ
Deleteஆண்டாண்டு காலமாய் அறிந்திருக்கும் அரிசி உப்புமாவும் -
ReplyDeleteதங்கள் செய்முறைகளினால் அருமையாகி விடுகின்றது..
அரிசி உப்புமாவுக்கு ஜே!..
அரிசி உப்புமாவுக்கு ஜே!.//
Deleteஜே..ஜே...!
இதுவும் எனக்கு புதிது. வீட்டில் அம்மா வேறுவிதமாக செய்வார்கள். பார்க்கவே நன்றாக இருக்கு.பகிர்வுக்கு நன்றி உமையாள்.
ReplyDeleteஎன் துணைவியார்க்கோ, எனக்கோ (ரவா இல்லாத போதும், அல்லது அது சலித்துவிடடது என்று நினைக்கும்போதும்) அவசரமாகத் தயாரிக்க உபயமே இதுதான். படத்தைப் பார்த்தாலே நாக்கில் ஊறுது.. செட்டிநாட்டுச் சமைல் ஸ்பெஷலிஸ்ட் னு தெரியுது. நன்றி.
ReplyDeleteநன்றி ஐயா
Deleteஎனது வீட்டில் விரதம் இருக்கும் பொழுது இரவில் செய்யப் படும் டிபனில் இது தான் முதலிடம் பெறும். தங்களது சமையலை போல!
ReplyDeleteதட்டில் வைத்து தட்டிக் கொடுத்து சாப்பிட சொல்லுவது போல் உள்ளது. ஆஹா அரிசி உப்புமா!
நன்றியுடன்,
புதுவை வேலு
ஹஹஹஹா....நன்றி சகோ
Deleteஉமையாள்,
ReplyDeleteஅரிசியில் செய்த உப்புமா என்பதால் சுவை அதிகமாக இருக்கும் என்பது படத்தைப் பார்க்கும்போதே தெரிகிறது. செய்து விடுகிறேன்.
நாங்க நொய் உப்புமா'ன்னு புழுங்கல் அரிசி நொய்யில இதேமாதிரிதான், ஆனால் பருப்பு போடாம செய்வோம்.
நன்றி சித்ரா.
Deleteகுமுட்டி அடுப்பில் வெங்கலப் பானையில் அரிசி உப்புமா செய்து தருவார்கள் அத்தைப் பாட்டி. அவ்வளவு ருசி. அதிலும் அந்த காந்தலின் ருசி .... ஆஹா.....
ReplyDeleteவெங்காயம் சேர்த்து செய்வதில்லை. செய்து பார்க்கலாம்!