இந்தியாவில் இருந்து வந்த தோழி 4 நெல்லிக்கனிகளைக் கொடுத்தார். 3 உபயோகித்து நெல்லி சாதம் செய்தேன். அதை அப்புறமாக பதிவிடுகிறேன்.
மீதம் ஒன்று இருந்தது புதிதாய் என்ன செய்யலாம் என யோசித்த... போது
அன்று தக்காளிசூப் செய்யலாம் என்று இருந்தேன். அப்போது தான் இதை சூப்பாக செய்தால் என்ன..? புதுசுக்கு புதுசும் ஆச்சு...!!! சூப்புக்கு சூப்பும் ஆச்சு...!!! என எனக்கு தோன்றிய விதத்தில் சூப் செய்தாகி விட்டது. குடித்துப் பார்த்தால் .....சூப் சும்மா சூப்பராக இருந்ததுங்க.
அதான் இப்போ உங்கள் முன் பதிவாக வந்து விட்டது. இனிமே நெல்லிக்கனி எப்போது கிடைக்கும் என ஏங்க வைத்து விட்டது. கிடைக்கும் இடத்தில் அடிக்கடி செய்து குடிக்கலாம். உடம்புக்கு மிகவும் நல்லதுன்னு நான் சொல்லியா உங்களுக்கு தெரியனும்....? உங்கள் அனைவருக்கும் தெரிந்தது தானே....இல்லையா நண்பர்களே..... ok ok.
விரைவில் சூப் தயாராகிவிடும்.
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் - 1
பச்சை மிளகாய் - 2
உப்பு - ருசிக்கு
மோர் புரதம் - 1/2 டம்ளர் ( இருந்தால்
உபயோகப் படுத்தலாம்)
நெல்லிக்காய் + ப மிளகாயகரைத்துக் கொள்ளுங்கள்
தாளிக்க வேண்டியது
எண்ணெய் - 1/2 தே.க
பட்டை சிறியது - 1
பிருஞ்சி இலை - 1/4 பீஸ்
கிராம்பு - 1
சோம்பு - 1/8 தே.க
தாளிக்கவும்.
அரைத்ததை ஊற்றவும். நன்கு கொதித்த பின்
மோர் புரதத்தை அல்லது வேண்டிய நீரை சேர்க்கவும்
கொத்தமல்லியை தூவவும்
வித்தியாசமான சூப் தயார்...!!!
குறிப்பு
மோர் புரதம் இல்லை என்றாலும் சூப் நன்றாக இருக்கும்.
மோர் புரதம் சேர்த்தாலும் சூப் நன்றாக இருக்கும்.
மோர் புரதம் இல்லையே என நினைக்க வேண்டாம்.
அதிகமாகவும் மோர் புரதத்தை சேர்க்கக்கூடாது. அப்புறம் நெல்லிக்காயின் சுவை தெரியாமல் போய்விடும். கவனத்தில் கொள்க.
நெல்லிக்காயில் சூப்பா ? புதுமையாக இருக்கிறதே...
ReplyDeleteவலைச்சர பணியிலும் வாசகர்களுக்கு சூப் தயார் செய்து கொடுத்தது சூப்பர்.
தமிழ் மணம் 2
வணக்கம்
ReplyDeleteசுவையான உணவு. செய்முறை விளக்கம் அசத்தல் பகிர்வுக்கு நன்றி த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரொம்ப சிம்பிள் ஆனா, சூப்பர் டிஷ்:) thanks தோழி!
ReplyDeleteநல்ல அருமையான யோசனை. ஒரு நெல்லிக்காய்க்கு சுமார் 200 எம் எல் தண்ணீர் தாங்குமா? செய்து பார்த்தால் தெரிந்து விடும். மிளகு, வெங்காயம் எல்லாம் சேர்க்கக் கூடாதோ!
ReplyDeleteநெல்லிக்காய் சூப்பா... சூப்பர்...
ReplyDeleteசெய்து பார்த்து விடுவோம்...
ஆஹா நாளை வீட்டில் நெல்லிக்காய் சூப்தான்
ReplyDeleteஏங்க ..சீக்கிரம் சாப்பிட வாங்க அப்படின்னு எத்தனை நேரமா கூப்பிடறது?
ReplyDeleteஅப்படி என்ன சமையல் ?
நெல்லிக்காய் சூப், கத்தரிக்காய் கொத்சு, மோர்குழம்பு ,
அப்பறம் ?
பட்டாணி உருளை பொரியல் , தயிர் வடை..
ஒண்ணுமே வேண்டாம்.
என்னது ஒன்னுமே வேண்டாமா? காயத்ரி அவங்க வலைப்பதிவு பார்த்து பார்த்து சமையல் பண்ணி இருக்கேங்க..
செத்த சும்மா இரு. இன்னிக்கு அவங்க வலைப்பதிவு படிச்சேன்.
சாய் நாமம் கவிதை . என்ன அழகான கவிதை ..நீயும் படிச்சுப்பாரு.
அதான் அப்பலேந்து பாடிகிட்டு இருக்கீகளா?
ஆமாம். நீயும் கேளு.
அவங்களுக்கு கொஞ்ச நேரத்துலே யூ ட்யூப் லிங்க் தாரேன்.
சுப்பு தாத்தா.
மீனாச்சி பாட்டி.
www.subbuthatha72.blogspot.com
ஏங்க ..சீக்கிரம் சாப்பிட வாங்க அப்படின்னு எத்தனை நேரமா கூப்பிடறது?
ReplyDeleteஅப்படி என்ன சமையல் ?
நெல்லிக்காய் சூப், கத்தரிக்காய் கொத்சு, மோர்குழம்பு ,
அப்பறம் ?
பட்டாணி உருளை பொரியல் , தயிர் வடை..
ஒண்ணுமே வேண்டாம்.
என்னது ஒன்னுமே வேண்டாமா? காயத்ரி அவங்க வலைப்பதிவு பார்த்து பார்த்து சமையல் பண்ணி இருக்கேங்க..
செத்த சும்மா இரு. இன்னிக்கு அவங்க வலைப்பதிவு படிச்சேன்.
சாய் நாமம் கவிதை . என்ன அழகான கவிதை ..நீயும் படிச்சுப்பாரு.
அதான் அப்பலேந்து பாடிகிட்டு இருக்கீகளா?
ஆமாம். நீயும் கேளு.
அவங்களுக்கு கொஞ்ச நேரத்துலே யூ ட்யூப் லிங்க் தாரேன்.
சுப்பு தாத்தா.
மீனாச்சி பாட்டி.
listen to your song in Raag Mohanam.here
Deletewww.menakasury.blogspot.com
and also
https://www.youtube.com/watch?v=iPSyosjpwqo
subbu thatha
சாய் பாமாலையை அற்புதமாக பாடி யூடியூபில் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி ஐயா.
Deleteஉடலுக்கு நன்மை செய்யும் நெல்லிக்காய் - மஹாலக்ஷ்மியின் இருப்பிடம்!..
ReplyDeleteவலைச்சரத்திலும் இங்குமாக - தங்களின் பணி பாராட்டுக்குரியது..
பயனுள்ள பதிவு.. வாழ்க நலம்!..
அடடா நெல்லிக்காயில் சூப்பா நல்லாயிருக்குமே. ஈஸியாக இருக்கு. நன்றி உமையாள்.
ReplyDeleteமீண்டும் நன்றிகள்.
என்றும் இளமையுடன் இருக்க..... அதியமானுக்கு ஔவைப்பாட்டி அளித்த நெல்லிக்கனி சூப்!!! ம்ம்ம் அருமை....ஏழைகளின் ஆப்பிள்....நெல்லிக்கனி எ டே கீப்ஸ் த டாக்டர் அவே...
ReplyDeleteஅப்படியே "மிக்சியில் அடித்துக்" கொடுப்பார்கள்... இது போல் செய்ததில்லை... நன்றி சகோதரி...
ReplyDeleteநெல்லிக்காய் சூப்.... அட நல்லா இருக்கும் போல இருக்கே! செஞ்சு பார்த்துட வேண்டியதுதான்....
ReplyDelete