ஆம்
உச்சந்தலையில் எண்ணெய் வைத்து
ஊறிட கொஞ்சம் நேரம்விட்டு
சிக்கலான வெப்பம் சீர்படவே
சீகக்காய் குழைத்து தேய்த்திடவே
தலையும் உடலும் தகதகக்க

இதமான வெந்நீர் இறக்கிவிட்டு
இதயம் குளிர உச்சியிலிட்டு
சிவந்த கண்கள் காட்டினவே
சில காலம் மறந்தமையை
வழுக்கி ஓடும் நீரோ...!
வழவழப்புத் தோலின் சாட்சியாய்
அக்னி தலையில் அடங்கிடவே
குடலின் பேய்பசி ஓடிடவே
நிதானம் நின்ற வேளையிலே
நிஜமோ...? என வியக்க வைக்கும்
R.Umayal Gayathri.
படமும் அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி.
Deleteஎண்ணெய் குளியலின் நன்மையை அருமையாக சொன்னது கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.