Sunday, 16 February 2014

கருவேப்பிலை குழம்பு




வறுக்கத் தேவையானவை
 
கருவேப்பிலை – 2 கை பிடி
மல்லி – 2 மே.கரண்டி
   கடலைப் பருப்பு – 2 மே.கரண்டி
மிளகு – 1 மே.கரண்டி
சீரகம் – 1 மே. கரண்டி
மிளகாய் – 2
நல்லெண்ணெய் – 1 மே.கரண்டி



தேவையானவை

நல்லெண்ணெய் - 9 மே.கரண்டி
வெங்காயம் - 1
பூண்டு - சிறிதளவு
புளி – 1 எலுமிச்சை
உப்பு -  தேவைக்கு



தாளிக்க தேவையானவை
கடுகு – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – சிறிதளவு




எண்ணெய் விட்டு

எல்லாவற்றையும்

வறுத்துக்  கொள்ளவும்.







7 மே.கரண்டி எண்ணெய் விட்டு தாளித்து,

வெங்காயம் , பூண்டு போட்டு வதக்கவும்.







புளியைக் கரைத்து விடவும்.


புளி சற்று கொதித்த பின் வறுத்த சாமன்களை

மிக்ஸியி போட்டு அரைத்துக் கொள்ளவும்.

தண்ணிர்விட்டு அரைக்க. இதை போட்டு கொதிக்க விடவும். உப்பு போடவும்.

எண்ணெய் கக்கி வரவும் இறக்கவும். பாத்திரத்தில்

மாற்றிய பின்பு 2 மே.கரண்டி நல்லெண்ணெய்யை

மேலே விடவும். சாப்பிடும் போது வாசமாக

இருக்கும் .







ஆர். உமையாள் காயத்ரி.




No comments:

Post a Comment