தேவையான பொருட்கள்
பெரிய கேரட்
– 1
பீன்ஸ் – சிறிதளவு
கொத்தமல்லி
– சிறிதளவு
உப்பு – தேவையான
அளவு
மிளகாய்ப் பொடி
– ½ தேக்கரண்டி
மல்லிப் பொடி
– ¼ தேக்கரண்டி
மஞ்சள் தூள்
– சிறிதளவு
எண்ணெய் - பொரிக்கத்தேவையானது
மாவு கரைசலுக்கு
வேண்டியவை
கடலை மாவு
– 4 மேசைக்கரண்டி
அரிசி மாவு
– 1 மேசைக்கரண்டி
பெருங்காயம்
– 1 சிட்டிகை
மிளகாய்ப் பொடி
– ¼ தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப்ப
தாளிக்க தேவையானவை
எண்ணெய் –
2 மேசைக்கரண்டி
கடுகு – ¼ தேக்கரண்டி
அரை உளுத்தம்
பருப்பு – ¼ தேக்கரண்டி
உருளைக்கிழங்கை
வேகவைத்து தோல் உரித்து மசித்து
வைத்துக் கொள்ளவும். கேரட், பீன்ஸ்சை நைசாக
நறுக்கவும். வெஜிட்டபிள் கட்டர் இருந்தால் அதில்
போட்டு நைசாக கட் பண்ணிக்
கொள்ளவும்.
வாணலியில்
தாளிக்கவும். பின் கேரட், பீன்ஸ்சை
போட்டு சற்று வதக்கவும். வதங்கியவுடன் மஞ்சள்
தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் உப்பு, போட்டு மசித்த உருளைக் கிழங்கு போட்டு கிளரவும்.
மிளகாய் பிளேக்சாக இருந்தால் நலம். கடைசியாக கொத்தமல்லி போட்டு கலக்கவும்.
மேல் மாவுக் கரைசலுக்கு
உள்ளதை பஞ்ஜி மாவு பதமாக கலந்து கொள்ளவும். வாணலியில் பொறிக்க தேவையான எண்ணெய்யை காய
வைக்கவும். காய்கறிக்கலவையை உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக மாவில்
தோய்த்து காயும் எண்ணெய்யில் போட்டு எடுக்கவும்.
பேஷான போண்டா ஆவி
பறக்க இதோ உங்கள் முன்னே…!
R Umayal Gayathri.
நாங்களும் செய்து பார்க்கிறோம்... நன்றி அம்மா...
ReplyDelete