Sunday 23 February 2014

வெங்காய ஊறுகாய்

தேவையான பொருட்கள்


வெங்காயம் _ 1/2  கிலோ
புளி _ பெரிய எலுமிச்சை அளவு
காய்ந்த மிளகாய் _ 20
மிளகாய்ப் பொடி _ 1 மேசைக்கரண்டி
உப்பு _ தேவையான அளவு
வெந்தயப் பொடி  _ 3/4 தேக்கரண்டி
கடுகு  _   1/2  தேக்கரண்டி
நல்லெண்ணைய் _ 200 மில்லி
பொருங்காயம் _ சிறிதளவு
வெல்லம் - சிறிதளவு

சிறிய வெங்காயம் என்றால் நல்லது. இல்லை என்றால் பெரிய வெங்காயம். மிளகாய், புளி, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணை விட்டு காயவும் கடுகு பேடவும். கடுகு வெடித்த பின் அரைத்த கலவையை போடவும். சிறிய தீயில் அவ்வப்போது கிண்டி விட்டுக் கொண்டு இருக்கவும்.

சுமார் 1¼ மணி நேரம் ஆகும். இப்போது அல்வா பதம் வரும். அப்போது மிளகாய்ப் பொடி,  வெந்தயப் பொடி, பெருங்காயம், வெல்லம் சேர்த்து கிளறவும். 

பாத்திரத்தில் இருந்து ஒட்டாமல் அல்வா போன்று வரும். ஆறின பின் கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும்.

தயிர் சாதம், இட்லி, தேசை, அடை, பொங்கல், உப்புமா, எல்லாவற்றிற்க்கும் தொட்டுக் கொள்ள பொருத்தமாக இருக்கும்.

ஒரு நாள் ரெடி செய்தால்
பல நாள் ரெடியாக இருக்கும்
ஒரு தடவை சுவை அறிந்தால்
பல தடவை தயார் செய்வீர்கள்


ஆர்.உமையாள் காயத்ரி.

1 comment:

  1. எனது சகோதரி செய்வார்கள்... உங்கள் செய்முறைப்படி செய்து பார்ப்போம்... நன்றி அம்மா...

    ReplyDelete