Saturday 4 July 2015

தலைவியின் காதல் / கவிதை



                                                             படம் கூகுள் நன்றி



மின்னல் பூக்குது என்னுள்ளே
மீண்டும் மீண்டும் என்னுள்ளே
காந்தம் வச்சாயோ உன்னுள்ளே
கவர்ந்து இழுக்கிறாய் தன்னாலே
மிச்சம் வைக்க சமைக்கவில்லை
மறந்து இன்னாளிருந் ததில்லை

வைக்கப் போரெடுத்து நான்
வாசலில்  போட்டு வந்தேன்
வண்ணக் கோலம் அதை
தொழுவத்தில்  இட்டு வந்தேன் 
பால் கறக்கச் சட்டியெடுத்தேன்
பார்த்தாலோ பை கையில்

வில்லு வண்டி கட்டித்தாரேன்
விரைந்தே போ ஊருக்கு
கட்டிக் கொடுத்த பின்பு
கட்டுத்தறியில் நிற்குமோ பசு
வந்த விருந்து ஆகிப்போச்சு
வாடாமல் போ ஊருக்கு






14 comments:

  1. வணக்கம்
    ஆகா ஆகா..என்ன வரிகள் நன்றாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ஆகா.. அவ்வளவு அவசரமா ஏன் ஊருக்கு அனுப்பவேணும்!..

    கண் முன்னால் காட்சிகளாகத் தெரிகின்றது - கவிதை!..

    ReplyDelete
  3. தலைவா ,சீக்கிரம் வந்துவிடு ,தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து :)

    ReplyDelete
  4. கிராமம் விரிகிறது கண்ணுள்ளே கூடவே ஊடலும் :)

    ReplyDelete
  5. சித்திரமும், கவிதையும் அருமை.

    ReplyDelete
  6. நல்ல கவிதை

    ReplyDelete
  7. //மின்னல் பூக்குது என்னுள்ளே
    மீண்டும் மீண்டும் என்னுள்ளே
    காந்தம் வச்சாயோ உன்னுள்ளே
    கவர்ந்து இழுக்கிறாய் தன்னாலே//

    இந்த ஆரம்ப நாலு வரிகள் மட்டுமே .....
    காந்தமாய் என்னைச் சுண்டி இழுத்து வந்தது .....
    இங்கு பின்னூட்டமிட ! :)

    பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  8. கிராமச் சூழ்நிலை கண்ணுக்குள் விரிகிறது.

    ReplyDelete
  9. கவிதையை ரசித்து படித்தேன் சகோ.

    ReplyDelete
  10. படமும் கவிதையும் கலக்கல். ரசித்தேன்.

    த.ம. +1

    ReplyDelete
  11. அட கிராமத்துக் காதல்! பாரதிராஜா படம் போல அப்படியே கண் முன்!!!

    ReplyDelete