Tuesday 13 May 2014

இருவரிக் கவிதைகள்


               இறைவனுக்கு நன்றி. அவ்வப்போது கவிதை ஊற்றை ஊறச் செய்தமைக்கு. அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது. குருவருளின்றி ஏதும் இல்லை. இறையாகிய குருவின் பாதங்களுக்கு நமஸ்காரம். என்றோ சரண் அடைந்து விட்டேன்.



1  அண்டத்தில் அதிரும் அதிர்வலையே - என்
    பிண்டத்தில் அதிர்வாய் நல்.

2  ஊற்றுக்கண் அடைத்துள்ளே தூங்க - திறவாயோ
    என்னுள் இருந்து கங்கை.

3  சொல்முறை யறிந்துசொற்கள் விழச் - செய்யுளாய்
    சொக்கனே புரிவாய் அருள்.

4  லயத்தோடு ஓதுமொலியதுவே ரீங்காரமாய் - உள்
    விழித்தெழ கண்டிட்டேன் நாதா.

5  செவ்வாய் யாதல் வேண்டும் - திருநாமம்
    சொல்லிய வாய் அது.

6  எதிமறை எண்ணத்தின் வெப்பம் - அது
    காட்டும் வியர்த்து உடல்.

7  தடங்களின் மொழிச்செப்பல் தெளிவு - விடயம்
    இல்லாற் காண் கூற்று.

8  அகமறிதல் தெரிந்த பின் - அங்கே
    நிறைந்து போனதுவே நிழல். 

9  கடகட ஓசையுள்ளே முகமது - காட்டிற்று
    கன்ணாடி பிரதி பிம்பம்.

10 வலிகளை விலக்கிவைத்து பார்க்க - வேடிக்கை
     வந்தவழி சென்றதுவே விரைந்து. 


ஆர். உமையாள் காயத்ரி.



  

No comments:

Post a Comment