Saturday, 3 May 2014

Karivadakak Kuzhambu கறிவடகக் குழம்பு



கறிவடகக் குழம்பு
தேவையான பொருட்கள்
கறிவடகம் – 12
சி.வெங்காயம் – 20
பூண்டு – 12
தக்காளி – 1
புளி - எலுமிச்சையளவு
சாம்பார்ப் பொடி – 11/2 தே.க
மஞ்சள் தூள் – சிறிது
உப்பு – ருசிக்குஏற்ப
வெல்லம் - சிறிது

தாளிக்க தேவையானவை
நல்லெண்ணெய் – 4 மே.க
கடுகு – ¼ தே.க
க.பருப்பு – ½ தே.க
சீரகம் – ¼ தே.க
பெருங்காயம் – சிறிது





தாளிக்கவும்.










                                   வெங்காயம் போட்டு வதக்கவும். 









பூண்டு போட்டு வதக்கவும்.








                                                         தக்காளி சேர்க்கவும்.





சாம்பார்ப் பொடி, மஞ்சள் தூள்சேர்த்து எண்ணெய்யில் நன்கு கிளறி பச்சை வாசனை போன பின் புளித் தண்ணீர் ஊற்றவும்.


கறிவடகத்தை முதலில் எண்ணெய்யில் வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

குழம்பு கொதித்து தயாராகவும் கறிவடகம் போட்டு , வெல்லம் போட்டு இறக்கவும்.









                              மிகவும் சுவையான கறிவடகக் குழம்பு  தயார்...!!!

அப்பளம்,வற்றல், தேங்காய் பூ போட்டு செய்த பொறியல்,கூட்டு இவைகள் சரியான பொருத்தமாக இருக்கும்.

                        தயிர் சாதத்திற்கும் இது ஜோரான காம்பினேஷன்.....!


குறிப்பு:

கறிவடகத்திலும் காரம் இருப்பதால் சாம்பார்ப் பொடி குறைவாக போடவேண்டும். கறிவடகம் போட்ட பின் கொஞ்ச நேரம் கழித்து காரம் சார்ந்து விடும்.பார்த்துக் கொள்ளுங்கள்.


R.Umayal Gayathri.



No comments:

Post a Comment