Sunday 30 March 2014

Cream Peas Gravy

தேவையான பொருட்கள்
பச்சை பட்டாணி – 2 கோப்பை
தக்காளி – 2
சாம்பார்பொடி - 11/2 தே.கரண்டி
கிரீம் – 2.தே.கரண்டி
கரம் மசாலா – 1தே.கரண்டி
உப்பு – தேவையானது
சோளமாவு – 1. தே.கரண்டி
கேசரி கலர் – சிறிது
வெல்லம் - சிறிது


தாளிக்க தேவையானது

எண்ணெய் – 3.தே.கரண்டி
சீரகம் – ½ தே.கரண்டி


பச்சைப் பட்டாணியை முதலில் உப்பு போட்டு சிறிது தண்ணீரில் அரைப் பதமாக அவித்துக் கொள்ளவும்.





 தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் வைத்துக் கொள்ளவும்





தாளிக்கவும். தக்காளி அரைத்ததை ஊற்றவும். சாம்பார்ப் பொடி, கரம் மசாலா போட்டு பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.

பச்சைவாசம் போன பின் பட்டாணியை போடவும்.உப்பு கொஞ்சம் போட்டு சாரவிடவும்


சோளமாவு, கேசரி கலர் இதை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து விட்டுவிட்டு, வெல்லம் போடு கிண்ட சேர்ந்து வரும். இப்போது கிரீம் விட்டு கலக்கி பறிமாறவும்.

ஹோட்டலில் சாப்பிட்டது போல இருக்கும். என்ன கிளம்பிட்டீங்களா.... ! ok ok....  திருப்தியா  பண்ணி சாப்பிடுங்கோ.......  நில்லுங்க...... எனக்கு பதில் சொல்லாம போனா எப்படி.....கீழே பதில் போட்டுட்டு  போனா thanks you so much...............  Ha Ha Ha ..... !!!

R.Umayal Gayathri.

2 comments: