தேவையான பொருட்கள்
பாதாம் - 1 கோப்பை
சர்க்கரை – 2 கோப்பை
நெய் - 1 கோப்பை ( கூடுதல் விரும்புவோர் இன்னும் 1/2 கோப்பை சேர்த்துக் கொள்ளுங்கள் )
பால் - அரைக்கத் தேவையான அளவு
பாதம் எஸ்ஸன்ஸ் - 2,3 சொட்டு
குங்கும்பூ - சிறிது
பாதாம் பருப்பை ஊறவைத்து தோலை உறித்துக் கொள்ளுங்கள்.
சிறிது பால் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
சர்க்கரை நனையும் அளவு சிறிது நீர் விட்டு ஒரு கம்பிப் பதம் வரும்
போது அரைத்த விழுதை சேர்த்துக்
கொண்டே கிளறுங்கள்.
இட்லி மாவு மாதிரி வரவும் அடுப்பை அணைக்கவும்.
பின் இறக்கிவைத்துக் கொண்டு நெய் சேர்த்து
கிளறிக் கொண்டே இருங்கள்.
நெய் முழுவதையும் அது ஈர்த்துக் கொள்ளும்.
குங்குமப்பூவை சிறிது வெந்நீரில் ஊறவைத்து கரைத்து விடுங்கள்.
அல்லது பாலில் கரைத்து விட்டு சேர்த்து கிளற அல்வா ரெடி.
பாதாம் அல்வா....தயாராகி விட்டது...!!!
சிறிய ஒரு கோப்பை பாதாமிற்கே அல்வா நிறைய வரும். முதலில் சிறிது செய்து பாருங்கள்.
20 பருப்புகளுக்கே...ஓரளவு கணிசமாக அல்வா வரும். வீட்டிற்கு இது தாராளமாக போதும்
பாதாம் ஹலவா ஆகா
ReplyDeleteதமிழ் மணம் 1
வாருங்கள் .....நன்றி
Deleteபாதாம் அல்வா - புதிய தகவல்!..
ReplyDeleteசுவைக்கு உத்தரவாதம்.. மகிழ்ச்சி!..
பாதாம் அல்வா - புதிய தகவல்!..//
Deleteஅப்படியா ஆச்சரியமக இருக்கிறது...நன்றி
சுவைக்கு உத்தரவாதம்.. //
ம்.....
பாதாம் ஹல்வா... ம்ம்ம்ம்.... டேஸ்டியான ஒன்று.
ReplyDeleteஆம் டேஸ்டியான ஒன்று தான்
Delete#20 பருப்புகளுக்கே...ஓரளவு கணிசமாக அல்வா வரும்#
ReplyDeleteபோதாமல் போகாதுபோலே , பாதாம் அல்வா:)
த ம 3
வாவ்...!
ReplyDeleteவாரே வாவ்...
Deleteஒரு முறை செய்யும்போது பக்குவம் தவறி சரியாக வரவில்லை.
ReplyDeleteநீங்கள் கூறிய முறையில் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்
அருமையான பதிவுக்கு நன்றி....
வாழ்க வளமுடன்
செய்து பார் சரிதா
Deleteநான் அவசியம் செய்கிறேன். எப்படி செய்தாலும் வீனாக போவாது. பரவாயில்லை. சரி சரி உங்களுக்கு நல்ல பெயர் தான் கிடைக்கும்.
ReplyDeleteஹஹஹா.....!
Deleteவணக்கம்
ReplyDeleteசுவையான அல்வா.. செய்முறை விளக்கம் நன்று த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆஹா! இன்று பாதாம் ஹல்வாவா !
ReplyDeleteஅருமை + இனிமை. பாராட்டுக்கள்.
மொத்தத்தில் இன்று எல்லோருக்கும்
‘ அ ல் வா ’ கொடுத்துட்டீங்கோ :)
மொத்தத்தில் இன்று எல்லோருக்கும்
Delete‘ அ ல் வா ’ கொடுத்துட்டீங்கோ :)//
அடடா...என்ன இப்படி சொல்லிப்புட்டீங்க...ஹஹஹா...
அல்வா படம் ஈர்க்கிறது. அருமை.
ReplyDeleteநன்றி ஶ்ரீராம்
Deleteஇப்படி படங்களைப் போட்டு ஆசையைக் கிளப்பிட்டீங்களே...
ReplyDeleteம்... ஊருக்குப் போனால்தான்... இதெல்லாம்...
ஆம் போகும் போது நினைப்பாக செய்யச் சொல்லி சாப்பிட்டு விட்டு வாருங்கள்.
Deleteவணக்கம் சகோதரி.!
ReplyDeleteபாதாம் அல்வா... படங்களை பார்க்கும் போதே சுவையாக சாப்பிடும் ஆவலை தூண்டி விடுகிறதே..! கண்டிப்பாக ஒரு நாள் செய்ய வேண்டும்.. பகிர்ந்தமைக்கு நன்றிகள் சகோதரி..!
நன்றியுடன்.
கமலா ஹரிஹரன்.
பாதாம் அல்வா பார்க்க அருமை ,பாதம் எஸ்ஸன்ஸ் விட்டு செய்தது இல்லை.எஸ்ஸன்ஸ் இல்லாமல் செய்து இருக்கிறேன்.
ReplyDelete