Tuesday 17 February 2015

ராயலசீமா வெண் பொங்கல்

ஆந்திராவில ராயலசீமா வெண் பொங்கல் சூப்பராக இருக்கும். எங்களின் ஆந்திரா வாசத்தப்போ அங்கே ஒரு தோழி செய்து கொடுத்தார்கள். அப்போது இருந்து இப்பொங்கலை அவ்வப்போது செய்து உண்டு மகிழ்வோம். 
அது இப்போது  உங்களுக்காக... 



தேவையான பொருட்கள்

ப.அரிசி - 3/4 கோப்பை
ப.பருப்பு - 1/2 கோப்பை
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
முந்திரி - 5
உப்பு - ருசிக்கு

தாளிக்க வேண்டியவை

எண்ணெய் - 2 மே.க
நெய் - 2 மே.க
மிளகு - 1/2 தே.க
சீரகம் - 1/2 தே.க
பிருஞ்சி இலை - 1
கருவேப்பிலை - சிறிது


முதலில் முந்திரியை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்


                                                தாளிக்கவும்.



வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.




அரிசி + பருப்பை 15 நிமிடங்கள் ஊறவைத்து விட்டு சேர்க்கவும்.



3 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு போட்டு குக்கரில் வேக விடவும்.








                                                               முந்திரியை சேர்த்து கிளறவும்.




சுட சுட பொங்கல்.....சாம்பார் அல்லது சட்னி இல்லை என்றால் இரண்டையும் பண்ணிக் கொண்டு அமர்ந்து ரசித்து ருசித்து சாப்பிடுங்கள்.

உண்ட மயக்கம்.....போன பின்பு.....சும்மாவே உண்டமயக்கம் வரும் ஆனா இந்த பொங்கல் வகையறாக்கள் சாப்பிட்டா கேட்கவும் வேண்டுமோ...?

அப்புறமா வந்து சொல்லுங்கள்...எப்படி இருந்தது என்று....


30 comments:

  1. //உண்ட மயக்கம்.....போன பின்பு.....சும்மாவே உண்டமயக்கம் வரும் ஆனா இந்த பொங்கள் வகையறாகள் சாப்பிட்டா கேட்கவும் வேண்டுமோ...?//

    இதில் ’பொங்கள்’ என்பதைப் ‘பொங்கல்’ என முதலில் மாற்றுங்கோ, ப்ளீஸ்.

    பொங்(கும்) ‘கள்’ குடித்தது போல எனக்கு இதைப்படித்ததுமே மயக்கம் வருகிறதுங்கோ

    ReplyDelete
    Replies
    1. ’பொங்கள்’ ’பொங்கல்’ ஆகாமல் மீண்டும் ‘பொஙல்’ என ஆகிவிட்டது.

      ’பொங்கல்’ மிகவும் மையாக இப்போது குழைந்து விட்டது என நினைக்கிறேன். :)

      அதை ருசித்து சுவைத்து சாப்பிடும்படி சரியாக ஆக்கித்தாருங்கள், மேடம், ப்ளீஸ்

      VGK

      Delete
    2. விசு படத்தினில் வரும் ........

      பனுமதி >>>>> பனுமாதி >>>>> பானுமதி

      ஜோக் போல ஆகிவிட்டது ... பாருங்கோ ! :)))))

      VGK

      Delete
    3. ஹஹஹஹஹா.....சரி செய்து விட்டேன் ஐயா..நன்றி.

      Delete
  2. மற்றபடி ‘ராயலசீமா வெண் பொங்கல்’ சீமைச்சரக்கு போலவே கிக் ஏற்படுத்துது.

    படங்களும் பக்குவக்குறிப்புகளும் சூப்பர். பாராட்டுக்கள். வாழ்த்துகள். ருசிகரமான பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. ‘ராயலசீமா வெண் பொங்கல்’ சீமைச்சரக்கு போலவே கிக் ஏற்படுத்துது. //

      அடடா...அப்படியா....நன்றி ஐயா.

      Delete
  3. "சுட சுட பொங்கல்.....சாம்பார் அல்லது சட்னி இல்லை என்றால் இரண்டையும் பண்ணிக் கொண்டு அமர்ந்து ரசித்து ருசித்து சாப்பிடுங்கள்." என சிறந்த செய்முறை வழிகாட்டல் உடன் பகிர்கிறீர்கள்.
    தொடருங்கள்

    ReplyDelete
  4. பார்க்கவும் படிக்கவும்
    நாவில் நீர் ஊறுவதைத் தவிர்க்க இயலவில்லை
    அற்புதமான இதுவரை அறியாத ரெஸிபியை
    அறிமுகம் செய்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா

      Delete
  5. வெண் பொங்கலில் வெங்காயமா? அட! செய்துடுவோம்.

    ReplyDelete
    Replies
    1. பிருஞ்சி இலை ,வெங்காயம் அவர்கள் ஸ்பெஷல்...நன்றி ஶ்ரீராம்

      Delete
  6. இதுக்குப் பேர் - ராயலசீமா வெண்பொங்கல்!..

    ஆச்சர்யம்.. இது எனக்கு மிகவும் விருப்பமான பொங்கல்!..
    பதிவுகளில் இருந்து மீள்வதற்கு நேரம் ஆகி விட்டால் -
    நான் செய்யும் திடீர் பொங்கல் இது தான்.. இதே தான்!..
    ஆனால் - வெந்தயம் சேர்ப்பதில்லை!.. மற்றதெல்லாம் சரி..

    அருமை.. அருமை!..

    ReplyDelete
    Replies
    1. பிருஞ்சி இலை ,வெங்காயம் அவர்கள் ஸ்பெஷல்...
      நன்றி ஐயா

      Delete
  7. தூக்கம் வருகிறதா...? என்று நாளை சொல்கிறேனே...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. சொல்லுங்கள் நன்றி

      Delete
  8. முந்திரிப்பருப்புடன் இருக்கும் வெண்பொங்கலை அப்படியே சாப்பிடனும் போல இருக்கு.!!
    வித்தியாசமா வெங்காயம் சேர்த்திருக்கு. சூப்பர்.

    ReplyDelete
  9. இரவு வேலை முடித்து விட்டு வந்ததும் - நானும் தூக்க கலக்கத்திலேயே -
    வெங்காயம் என்பதற்கு வெந்தயம் என்று எழுதி விட்டேன்!..

    நிஜம் தான்!.. பதிவில் ராயலசீமா பொங்கலைப் பார்த்ததுமே தூக்கம் வருகின்ற மாதிரி தான் இருக்கின்றது!..

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா....பரவாயில்லை ஐயா. நாம் ஒன்று நினைத்து தட்டும் போது சிலநேரங்களில் மாறி வந்து விடுகின்றன எழுத்துக்கள்.

      Delete
  10. நான் இலங்கையைச் சேர்ந்தவன்.
    பிருஞ்சி இலை என்பது என்ன?
    இப் பொங்கலுக்குப் பால் சேர்ப்பதில்லையா?
    இப்படியான பொங்கல் வகை எங்கள் உணவில் இல்லை. செய்முறை இலகுவாக உள்ளதால் ஒரு தடவை
    செய்ய விருப்பம்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் யோகன்...தங்கள் முதல் வருகைக்கு வந்தனங்கள்

      பிருஞ்சி இலை என்பது என்ன? //
      பிரியாணியில் போடுவோமே...இலை அது தான். Curry Leaf

      பால் சேர்ப்பது இல்லை சகோ.தேவையும் இல்லை

      இப்படியான பொங்கல் வகை எங்கள் உணவில் இல்லை. செய்முறை இலகுவாக உள்ளதால் ஒரு தடவை
      செய்ய விருப்பம்//

      செய்து பாருங்கள் சகோ. வருகைக்கு நன்றி

      Delete
    2. Bay Leaf - பிருஞ்சி இலை

      Delete
  11. பொங்கல் அருமை. எனக்கு பிடிக்கும். அவசியம் செய்து தங்களுக்கும் தருகிறேன். பொங்கல் இல்லை. எனக்கு விழும் பாராட்டுகளை. சரியா உமையாள்.

    ReplyDelete
    Replies
    1. சரி...சரி...மகேஷ்வரி .

      Delete
  12. யாரவது செஞ்சு தந்தால் தின்னு பார்த்து விட்டு சொல்வேன்.
    தமிழ் மணம் 4

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா...அதுவும் சரி தான் நன்றி

      Delete
  13. வெண் பொங்கல் அருமை...
    எனக்கு பொங்கலே பிடிக்காது.. ஊரில் தொடவே மாட்டேன்...
    இங்கே நான் இதுபோல் செய்து கொடுத்து... நானும் சாப்பிட்டு நண்பர்களும் நல்லாயிருக்குன்னு சாப்பிட்டிருக்காங்க அக்கா...

    ReplyDelete
  14. வெண் பொங்கல் பார்சல்! ப்ளீஸ்....(ஃபிரிட்ஜுலதானே இருக்கு...??!!! இல்ல அன்னிக்கே காலியாயிருக்கும்ல.....நாங்க லேட்டா வந்ததுனால....அஹஹஹ).

    வெங்காயம் சேர்த்தது இல்ல....ஸோ இதையும் செய்துட்டாப் போச்சு.....இது நார்த்த் இண்டியன் டிஷ் போல இருக்கு இல்லையோ?!!! கிச்சடி!!??

    ReplyDelete
  15. ‘ராயலசீமா வெண் பொங்கல் இதில் வெங்காயம் இருக்கே! நல்லா இருக்கும் போலும் செய்துப்பார்க்க வேண்டும்.

    ReplyDelete