குளிருக்கு நாக்கு
மொறு மொறுப்பாக கேட்க...
வேறு சுவை நல்கு என
வேதாந்தம் பேச...
வைக்கிறேன் உனக்கு
ஒரு வடையை என
மூளை யோசிக்க
முளைத்தது....ஒன்று
முனைப்புடன் செய்தேன்
முள்ளங்கி வடை...
முனுமுனுக்காது வாய்
மென்றது வடையை...
கரகர மொறுமொறு வடை
கண்கள் என்ன சொல்லுது...?
தேவையான பொருட்கள்
கொண்டக்கடலை - 1/2கோப்பை
வரமிளக்காய் - 5
பூண்டு - 2 சோம்பு - 1 மே.க
இஞ்சி - 1/2 துண்டு
கொண்டக்கடலையை முதலிலேயே 7மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
இப்போது எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு கொர கொரப்பாக சுற்றி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
( தண்ணீர் தேவையில்லை)
முள்ளங்கியை துருவி வைத்துக் கொள்ளவும்.
கருவேப்பிலை ,மல்லியை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
அரைத்ததை ஒரு பாத்திரத்தில் போட்டு.
நறுக்கியதை சேர்த்து உப்பு போட்டு,அரிசி மாவு சேர்த்து பிசைந்து, வடைகளாக தட்டி, எண்ணெய்யில் பொரிக்கவும்..
சாயங்காலப் பலகாரம்...!
சாயாவுடன் தயார்...!!!
மொறு மொறுப்பாக கேட்க...
வேறு சுவை நல்கு என
வேதாந்தம் பேச...
வைக்கிறேன் உனக்கு
ஒரு வடையை என
மூளை யோசிக்க
முளைத்தது....ஒன்று
முனைப்புடன் செய்தேன்
முள்ளங்கி வடை...
முனுமுனுக்காது வாய்
மென்றது வடையை...
கரகர மொறுமொறு வடை
கண்கள் என்ன சொல்லுது...?
தேவையான பொருட்கள்
கொண்டக்கடலை - 1/2கோப்பை
வரமிளக்காய் - 5
பூண்டு - 2 சோம்பு - 1 மே.க
இஞ்சி - 1/2 துண்டு
முள்ளங்கி - 1
அரிசி மாவு - 2 மே.க
அரிசி மாவு - 2 மே.க
கருவேப்பிலை -சிறிது
கொத்தமல்லி - 1 கை பிடி
உப்பு - ருசிக்கு
எண்ணெய் - பொரிக்க தேவையானது
கொண்டக்கடலையை முதலிலேயே 7மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
இப்போது எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு கொர கொரப்பாக சுற்றி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
( தண்ணீர் தேவையில்லை)
முள்ளங்கியை துருவி வைத்துக் கொள்ளவும்.
கருவேப்பிலை ,மல்லியை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
அரைத்ததை ஒரு பாத்திரத்தில் போட்டு.
நறுக்கியதை சேர்த்து உப்பு போட்டு,அரிசி மாவு சேர்த்து பிசைந்து, வடைகளாக தட்டி, எண்ணெய்யில் பொரிக்கவும்..
சாயங்காலப் பலகாரம்...!
சாயாவுடன் தயார்...!!!
ம்ம்ம்...... சுவை!
ReplyDeleteநன்றி ஶ்ரீராம்.
Deleteஏந்தேன் இந்தப்பதிவுக்கு வந்தோம்னு இருக்கு ஹோட்டலில் சோறு முடிஞ்சு போச்சுனு சொல்லிட்டான் பிஸ்கட்டை வாங்கி திண்ணுட்டு உட்காரும்போது... இப்படியா..... உடனே லீவு போட்டு ஊருக்குப்போகணும் போல இருக்கு.
ReplyDeleteதமிழ் மணம் 3
கில்லர் ஜி.. யாருன்னு தெரியாம சோறு முடிஞ்சு போச்சு..ன்னு சொல்லிட்டான்!..
Deleteஒரு வார்த்தை.. ஒரு வார்த்தை சொல்லுங்க தல!..
விடுங்க ஜி போயிட்டுப்போறான் பேதியில......
Deleteஅடப்பாவமே அண்ணனுக்கு சோறு இல்லைன்னு சொல்லிட்டானுங்களா?
Deleteஅடடா.....என்ன இப்படி ஆகிப்போச்சே.......
Deleteஹோட்டல் காரன் தம்பி வருவாருண்ணு சோற்றை எடுத்து வைத்து இருக்க வேண்டாமா..?
Deleteஇப்படி பிஸ்கட் சாப்பிட வைத்துவிட்டானே....
வணக்கம
ReplyDeleteஅருமையான கருத்துடன் அழகான சமையல் குறிப்பு நன்று த.ம4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
Deleteவா..வ் சூப்பரா இருக்கு வடை. கண்கள் இப்பவே செய்து சாப்பிடு என்கிறது. மொறுமொறுன்னு இருக்கும்போல. நன்றி உமையாள் பகிர்வுக்கு.
ReplyDeleteமொறுமொறுன்னு இருக்கும்போல //
Deleteஆமாம் செம மொறுமொறுப்பு......எங்களுக்கு மிகவும் பிடித்து விட்டது....
நன்றி பிரியசகி
ஐ... வடைக்கு கவிதை அருமை... முள்ளங்கி வடையோ பார்க்கவே சூப்பரா இருக்கு..
ReplyDeleteம்... ஊருக்குப் போனத்தானே முள்ளங்கி வடை சாப்பிட முடியும்...
ஐ... வடைக்கு கவிதை அருமை//
Deleteநன்றி
ஊருக்குப் போனத்தானே முள்ளங்கி வடை சாப்பிட முடியும்.//
ஆமாம் அப்போது சகோதரி செய்து அசத்துவார்கள் விடுங்கள் கவலையை
Parcel Please... ஹா... ஹா...
ReplyDeleteஅனுப்பி விடுகிறேன் சகோ.
Deleteஹஹஹா...!!!
சுவையான வடை.
ReplyDeleteபார்க்கும்போதே நல்லா இருக்கே..... இப்போ இங்கே முள்ளங்கி சீசன்...
ReplyDelete