காலை காப்பி,டீ என நாம் பருகும் பழக்கம்...ஆங்கிலேய காலத்தில் இருந்து துவங்கியது தான். ஆனால் முன்பு இந்த நீராகாரத்தை தான் பருகினார்கள். இதை நமக்கு பிடித்த மாதிரி கலந்து அருந்தலாம்.
கற்பக மூலிகைகளில் தூதுவளையும் ஒன்று. கொடியாக படரும். சிறுசிறு முட்கள் தண்டு, இலைகளில் காணப்படும். இதன் இலை, பூ,காய், வேரென அனைத்தும் மருத்துவ பயன் உடையது. கால்சியம் நிறைந்து இருக்கிறது. இதை சாப்பிடுவதால் சளி, இருமல், இரைப்பு, மண்டையில் நீர்கோர்த்தல், வாதம், பித்தம், காது மந்தம், இன்னும் பிறவற்றையும் சரி செய்யும்.
சுலபமாக எளிதில் செய்யலாம். குழந்தைகளுக்கு வித விதமாக செய்ய வேண்டி இருக்கும். இதை செய்து கொடுத்தால் அவர்கள் ஆவலாக சாப்பிடுவார்கள் . காலை மாலை டிபனுக்கு பொருத்தமாக இருக்கும்.