Tuesday 28 October 2014

பீட்ரூட் மசால் சூப்

மழை & குளிருக்கு இதமான பானம் அருந்தலாம்...!!!





தேவையான பொருட்கள்

பீட்ரூட் - 1/2
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 1
பூண்டு - 6
இஞ்சி - 1 துண்டு
மிளகு & சீரகப்பொடி - 1/4 தே.க
மஞ்சள் தூள் - சிறிது
பாசிப்பருப்பு - 1 மே.க
நெய் - 1 தே.க






தாளிக்க வேண்டியவை

எண்ணெய் - 1 தே.க 
கிராம்பு - 1
பட்டை - 1/2 துண்டு
பிருஞ்சி இலை -1/2 துண்டு
சோம்பு - 1/4 தே.க






தாளிக்கவும்.

காய்களை சிறிது வதக்கவும்.

பாசிப்பருப்பு, மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் 1 விசில் விடவும். ஆறவும் மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்.

பின் அரைத்ததைக் குக்கரில் விட்டு மிளகு & சீரகப் பொடி சேர்த்து கொதிக்க விடவும். நெய் விட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும்.




                                           பீட்ரூட் மசால் சூப்  ஆவிபறக்க தயார்...!!!


 இந்த மழை நாட்களுக்கு இதமாக இருக்கும். சளி தொந்தரவை கட்டுப்படுத்தும்



19 comments:

  1. பீட்ரூட் மசால் சூப் பார்க்கும் போதே ஆர்வத்தை தூண்டுதே...நன்றி

    ReplyDelete
  2. நாவூறும் சுவை
    நல்ல பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நன்றி ஐயா

      வாழ்க வளர்க
      உமையாள் காயத்ரி

      Delete
  3. ம்..ம்..ம்.. அருமையாக இருக்கும் போல் இருக்கிறதே. செய்து பார்க்கிறேன் தோழி தொடர வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. செய்து பாருங்கள் தோழி
      நன்றி
      வாழ்க வளர்க
      உமையாள் காயத்ரி

      Delete
  4. பீட்ரூட் சூப் குடித்திருக்கிறேன்.
    இப்போது தான் பீட்ரூட் மசால் சூப் கேள்விப்படுகிறேன்
    பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. சகோதரியாரிடம் சொல்லி சுடசுட வாங்கிச் சாப்பிடுங்கள்.
      நன்றி
      வாழ்க வளர்க
      உமையாள் காயத்ரி

      Delete
  5. வணக்கம் !

    அருமையான சூப் !இலகுவான முறையில் இன்றே தயாரித்து உண்ண
    வேண்டும் :) .பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி .

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்

      இன்று செய்து, அருந்தி மகிழ்ந்து சொல்லுங்கள் தோழி.

      நன்றி
      வாழ்க வளர்க
      உமையாள் காயத்ரி

      Delete
  6. படங்களே அருமை .குடித்துப் பார்த்தால் இன்னும் அருமையாய் இருக்கும் போலிருக்கே !
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா...அருமையாகத்தான் இருக்கும் ஐயா.

      நன்றி
      வாழ்க வளர்க
      உமையாள் காயத்ரி

      Delete
  7. நான் செய்தாச்சு. சூப்பரா இருந்தது உமையாள்.இப்போ இங்குள்ள குளிருக்கு இதமா, பாசிபருப்பு கடிபடுகையில்,மிளகுசீரக தூள் ருசியைகொடுத்தது.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...நன்று நன்று..
      விரைவில் செய்து ருசித்தமைக்கு
      விரைவாய் வந்து மறுமொழி செப்பியமைக்கு
      நன்றி
      வாழ்க வளர்க
      உமையாள் காயத்ரி

      Delete
  8. சூப் ரொம்ப அருமையாக இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் முதல் தடவையாக என் வலைப்பூக்கு வந்திருக்கிறீர்கள்.

      வாருங்கள்...வாருங்கள். கருத்திட்டமைக்கு நன்றி

      சாய்ராம்
      உமையாள் காயத்ரி

      Delete
  9. அருமையா செய்து இருக்கீங்க .. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. நன்றி சங்கீதா

    ReplyDelete