Thursday 23 October 2014

கிருஷ்ணகானம்


                               சொல்லிட உள்ளம் புரியாது
                               சொல்லிட கேட்பவர் அறியாது
                               மன்மதன் மாயன் என்பதனால்
                               மனதில் மோகம் போகாது


                               வாசலில் பன்னீர் தெளித்திட்டே
                               வண்ணக் கோலம் இட்டுவந்தேன்
                               வருவான் கார்முகில் வண்ணனவன்
                               வட்டிலில் பலகாரம் எடுத்துவைத்தேன்

                               ஆசையாய் உண்பான் என்னவன்
                               அள்ளிஅள்ளித்தருவான் ஆனந்தம்
                               குடும்பங்கள் ஒன்றாய் இணைந்தாட
                               குதூகலம் பரவிடும் எங்கெங்கும்

                               பாலும்மோரும் நிறைந்தோட
                               வெண்ணெய் பொங்கிட தாழியிலே
                               சுவைப்பான் ஆவலாய் சூதுக் கண்ணன்
                               நெய்யின் மணமது கோகுலத்தில்

                               மகிழ்வின் நிறையது வியாபித்து
                               குழலின் இன்னிசை மோகித்து
                               ஹரேஹரே ஹரேஹரே என்றிடவே
                               கிருஷ்ணம் பொங்கி வழிந்தோடும்..






12 comments:

  1. சிறந்த பக்திப் பா வரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete
  2. கிருஷ்ண கானம் ரசித்தேன். அருமை.

    ReplyDelete
  3. குடும்பங்கள் ஒன்றாய் இணைந்தாட
    குதூகலம் பரவிடும் எங்கெங்கும்
    கிருஷ்ணகானம் கவிதவீசைப்பது அருமை..!























    ReplyDelete
  4. கண்ணன் அழகும் கவியமுதும் அருமை!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. மாயக் கண்ணன் மகிழ்வான் பாவண்ணம் கண்டு! அருமை! ரசித்தேன் தோழி !

    ReplyDelete
  6. கண்ணனிடம் மயங்கவைக்கிறீர்கள்...

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரி.!

    அருமையான கவிதை.! கண்ணனைப்பற்றி எத்தனைப்பாடினாலும், ஆனந்தமாக படித்து, கேட்டு, ரசித்துக்கொண்டேயிருக்கலாம்.! திகட்டாது.! நானும் மிகவும் ரசித்தேன்! வாழ்த்துக்கள்!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.


    ReplyDelete