Friday 24 October 2014

சோயா உருண்டைக் குழம்பு

சத்தான சோயா உருண்டை குழம்பு சாப்பிடலாம...?

                                     வாங்க போகலாம் சமையலறைக்கு... 






தேவையான பொருட்கள்.

சோயா உருண்டைகள் - 1 கோப்பை

( இதை வெந்நீரில் போட்டு 10 நிமிடங்கள் ஊறவிடவும். பின் பிழிந்து தண்ணீரில் அலசி பிழியவும். இன்னும் இரண்டு முறை இதே போல் செய்யவும்)
 
வெங்காயம் - 1  அல்லது
(சின்ன வெங்காயம்  - 15 )
பூண்டு 7 பல்

தக்காளி - 1

புளி - பெரிய நெல்லி அளவு
சாம்பார் பொடி  - 1 1/2 தே.க 
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - ருசிக்கு
கருவேப்பிலை - சிறிது


 அரைக்க வேண்டியது

தேங்காய் - 3 மே.க
சீரகம் - 1/2 தே.க
வரமிளகாய் - 1
                  

தாளிக்க வேண்டியவை

எண்ணெய் - 3 மே.க
கடுகு - 1/4 தே.க
பெருங்காயம் - சிறிது
                                                  தாளிக்கவும்






வெங்காயம்,பூண்டு, 
கருவேப்பிலையை வதக்கவும்









தக்காளியை சேர்த்து வதக்கவும்.












புளிக்கரைசலை ஊற்றவும்.










சாம்பார் பொடி , மஞ்சள் தூள் சேர்க்கவும்








சாம்பார் கொதி வரவும் சோயாவை சேர்க்கவும். 

சோயாவில் குழம்பு சாரவும் 











அரைத்ததை ஊற்றவும். சற்று கொதித்த பின்  இறக்க வேண்டும் அவ்வளவே....தான்.








சோயா உருண்டை சின்ன அளவு, மற்றும் பெரிய அளவில் கிடைக்கின்றன.

நான் சின்ன அளவில்  உள்ளதைப் பயண்படுத்தி இருக்கிறேன்.


ok  செய்துண்டு மகிழுங்கள்...!!!

மற்றும் 


சோயா பச்சடி

http://umayalgayathri.blogspot.com/2014/03/soya-chunks-pachadi_4.html


சோயா பொதினா பொரியல்

http://umayalgayathri.blogspot.com/2014/04/soya-chunks-mint-curry-meal-maker-poriyal-rug.html





15 comments:

  1. Super...Super..
    Thank you Aunty

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  2. வணக்கம்
    சகோதரி

    அழகிய செய்முறை விளக்கம் பகிர்வுக்கு நன்றி த.ம1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. சோயா உருண்டை குழம்பு பார்க்க யம்மி. நானும் செய்வதுண்டு. உங்க குறிப்பு ரெம்ப வித்தியாசம் உமையாள் .நான் சோயாவை பொரித்து வைப்பேன். செய்து பார்க்கிறேன் .நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் குறிப்பையும் பதிவிடுங்கள் தோழி. நானும் செய்து பார்க்கிறேன். நன்றி.

      Delete
  4. வணக்கம் சகோதரி.!

    தங்கள் சோயா உருண்டை குழம்பு செய்முறை நன்றாகவிருக்கிறது.! செய்து பார்க்கிறேன்.!
    நாங்கள் இங்கு சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள வெங்காயம் தக்காளியுடன் சேர்த்து ௬ட்டு மாதிரி செய்வோம்.!

    தங்கள் பக்குவம் வித்தியசமான சுவையை கொடுக்குமென நினைக்கிறேன்.! இதையும் முயற்சிக்கிறேன்.! பகிர்ந்தமைக்கு நன்றி.! வாழ்த்துக்கள்!

    நட்புடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  5. எனக்குப் பிடித்த உணவும் இதுவே!
    சிறந்த செய்முறை வழிகாட்டல்
    தொடருங்கள்

    ReplyDelete
  6. வாசித்து விட்டு கருத்து போட்டு விட்டேன் என்றல்லவா எண்ணினேன் . ம்..ம்..ம்..ம் நன்று சோயாக் குழம்பு நான் அடிக்கடி செய்வதுண்டுசமையல் முறை வேறு விதமாக இருக்கும் வித்தியாசமான சுவையை தரும் என நினைக்கிறேன். நன்றி ! வாழத்துக்கள் ....!

    ReplyDelete
  7. கிட்டத்தட்ட காரக்குழம்பு ஸ்டைல்தானோ?!! செய்வதுண்டு! தேங்காய் எப்போதாவது! விளக்கம் அருமை! கீதா.....

    சாப்பிட வர்ரேங்க..!...-துளசி

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதா

      சாப்பிட வாங்க சகோ

      Delete
  8. எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு குழம்பு. பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி

    ReplyDelete