Sunday, 27 July 2014

மிதி வண்டிமிதி வண்டி

இந்த மிதி வண்டி வாட்டர் கலரில் வரைந்தது. வாட்டர் கலர் கைப்பழக்கம் வரவேண்டும் என்பதற்காக வரைந்தேன்.


வரைந்து முடித்து நாளாகி விட்டது. இன்று அதை எடுத்து பார்த்த போது எனக்கு ஏனோ…?  நான் மிதி வண்டி விட கற்றது ஞாபகம் வந்தது.

""நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும்"
என சினிமா பாடல் போல பின் நோக்கி என் நினைவலைகள் சென்றன...

நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம். என் வயதை ஒத்தோறும் மூத்தோறும் மிதி வண்டி ஓட்டி மகிழ்ந்தனர். எனக்கும் மிதி வண்டிஓட்ட வேண்டும் என்று ஆசை. 

அப்போது மதுரையில் என் அக்கா வீட்டில் இருந்து (ஒரு வருடம்) படித்துக் கொண்டிருந்தேன். அந்த தெருவின் மூலையில் மரத்தடியில் வாடகைக்கு சைக்கிள் விடும் கடை இருந்தது. அதை கடை என்று சொல்ல முடியாது… ஆனால் கடை தான். ( கட்டில் மாதிரி ஆனால் கட்டில் இல்லை அப்படின்னு வருமே வசனம் அது போல) இப்போ நல்லா புரியுமே…ஹி..ஹி.. முன்னம் இது மாதிரி ஓட்டியவர்களுக்கு இது புரியும்.
1 மணி நேரத்திற்கு 25 பைசா… அப்படின்னு நினைக்கிறேன். நிறைய நாட்கள் ஆகிவிட்டது இல்லையா…அதனால துல்லியமா நினைவில்லை.

ஒரு மங்கலான நினைவு.

நம்மளோட ரதபவனிக்கு ஆயத்தமானேன். துட்டு,துட்டு…. மணி…மணி… 25 பைசாவை கையில் வைத்துக் கொண்டு கடையின் (கடை மாதிரி) முன் ஆஜர். என்னுடன் இன்னும் 3 பேர்கள். வண்டியை எடுத்தாச்சு… உதவிக்கும் சிலர்..இல்லையா பின்னே…சொல்லித்தர… பின் காரியரை பிடித்துக் கொண்டு ஓடிவர…

அப்படி இப்படின்னு காலனியில ஓட்டி..தெருவல்லாம் வாரி…வீரத்தழும்புகள் உடலில் ஒரு வழியா மிதி வண்டி இருக்கையில் உட்கார்ந்து ஓட்ட ஆரம்பித்தேன். ஒட்டிட்டுப் போனா எதிர்த்தார்ப் போல மாமா,மாமி ஜோடியா வாக்கிங் போக வந்துட்டு இருந்தாங்க. சரி..ஒரு சின்னப் பிள்ளை வண்டியோட்டப் பழகுதே தெரு வெல்லாம் பிள்ளைகள் சைக்கிள ஓட்டுறாங்களே நாம ஓரமா போவோம்ன்னு இல்லாம… கை கோர்த்துட்டு நடு ரோட்டுல வந்தாங்க.

வழி வழின்னு சொல்லிட்டு…. சும்மா கை அந்த ஆட்டம் ஆடுது இல்ல… ஹாண்டில் பார் சும்மா இல்லாம எங்க…. எப்படி…. போகனும்னு தெரியாம திகைச்சுப் போய் நேர மாமா கிட்ட போச்சு…ஆனா சும்மா பிடிவாதமா நடுரோட்டுல தான் வந்தாங்க. நடப்பவர்கள் ஓரமாகத் தானே போகனும். ம்ஹூம்…. பாவம் விதி வலியது… இல்லையா…

நாம என்ன செய்ய முடியும். சரி நாம புத்திசாலியா நடுவுல புகுந்து அந்தப்பக்கம் போகலாம் அப்படின்னு தான் நினைத்து போனேன். ஆனா அவர்கள் கையை விடுவதாக இல்லை. நமக்கோ கை ஆடுறதுல திருப்ப தெரியவில்லை. தெரிந்தவர்களோ வழி விடுவதாக இல்லை.
நடுவில் சென்ற மிதி வண்டி மாமாவின் வலது காலை பதம் பார்க்க. கைகள் விலக, வலியில் அவர்கள் திட்ட…. விழுந்த நானும்,மிதி வண்டியும், நண்பர்களும் விட்டோம் ஜீட்….ஒடிய வேகத்தில் ஒலிம்பிக்கில் மெடல் வாங்கியிருப்போம்!!

அதை நினைத்து இப்போது சிரித்தேன்.  ஆனாலுங்கோ….தொடர்ந்து மிதி வண்டி கற்றுக் கொண்டேன்.


முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுந்தி விடும்17 comments:

 1. எல்லோருமே வாழ்க்கையில் பலபேர்களை பழி வாங்கி இருக்கிறோம் (வழி கொடுக்காதவர்களை) சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
 2. சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
 3. வரைந்த படமும் மலர்ந்த நினைவும்
  விரைந்து படைத்த விருந்து!

  கைவண்ணக் காட்சியும் கலந்த நினைவும் அருமை!
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
 4. அருமையான படத்துக்கு வாழ்த்துக்கள்.

  தங்களின் மலரும் நினைவுகளில் நானும் மூழ்கி எழுந்து விட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
 5. மிகவும் அழகாக வரைந்துள்ளீர்கள்! எங்கள் மிதிவண்டியை பின்னோக்கி இழுத்துச் சென்றது தங்களின் இந்த மிதி வண்டியின் பதிவு. வீரத் தழும்புகள் இல்லாமல் மிதி வண்டி கற்றவர்கள் உள்ளனரோ?!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
 6. தங்களைத் தொடர்கின்றோம்!

  ReplyDelete
 7. அழகான நினைவலைகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
 8. உங்கள் பதிவு, நான் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்ட அந்த நாட்களை நினைவு படுத்தியது. நீங்களாவது தப்பி ஓடி விட்டிர்கள். நான் ஒரு பெரியவர் மீது சைக்கிளை விட்டு கன்னத்தில் பளார் என்று அறை வாங்கியது இன்னும் ஞாபத்தில் இருக்கிறது. நான் சைக்கிள் மணி அடிக்க அடிக்க அவரும் நடு ரோட்டில் வந்தவர்தான்.

  இப்பொழுதெல்லாம் பிள்ளைகள் யார் துணையும் இல்லாமல் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டு விடுகிறார்கள். காரணம் இப்போதுள்ள சிறுவர் சைக்கிள்களில் சிறிய சக்கரமான SIDE WHEEL உள்ளது.
  த.ம.1

  ReplyDelete
  Replies
  1. இக்காலத்தில் வசதிகள் இருக்கின்றன. தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.

   Delete
 9. Super Chitti had fun reading the comments from others also. keep going.......................

  ReplyDelete