Saturday 9 August 2014

Kite Festival Paintings

எண்ணெய் வண்ணத்தில் தீட்டப்பட்ட ஓவியம்.

இந்த வண்ணம் மிகவும் வசதியானதும்  அழகானதும் கூட.


பளிச்சிடும் வண்ணங்கள். கேன்வாஸில் வரைந்து இருக்கிறேன்.

வாழ்த்து அட்டை ஒன்றில்இந்தப் படத்தை பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது. இதை ஓவியமாக வரைய வேண்டும் என நினைத்தேன். இதை எப்படி பெரிதாக்கி வரைந்தேன் என்பதை பகிர்ந்து கொள்கிறேன்.


அஞ்சல் அட்டை அளவான படத்தை நாம் எதில் வரைகிறோமோ... அந்த அளவுக்கு பெரிதாக்க முடியும்.

மாதிரிப்படம் கைவசம் இப்போது என்னிடம் இல்லை... முன்பு எடுத்த புகைப்படத்தை இப்போது போட்டு இருக்கிறேன்.

மாதிரிப் படத்தில் அகலவாக்கில் சரிசமமாக இரண்டாக பிரித்துக் கொண்டு பென்சிலால் கோடு வரைந்து கொள்க.  அதே போல் நீளவாக்கில் சரிசமமாக
பிரித்து கோடு போட்டுக் கொள்ளுங்கள். இப்போது படம் 4  பிரிக்கப்பட்டு இருக்கும்.

மேலும் இதே போல் ஒவ்வொரு சதுரத்தையும் 4, 4 காக பிரித்துக் கொள்க.
16 ஆகிவிட்டது.

இதே போல் நீங்கள்  எந்த அளவில் வரையப் போகிறீர்களோ ....அதிலும் இதே போல் கட்டம் வரைந்து கொள்ளுங்கள்.

மாதிரிப்படத்தில் உள்ள உருவத்தைப் பார்த்து நாம் வரையும் போர்டில் கட்டம் கட்டமாக என்ன இருக்கிறதோ அதை அப்படியே வரைய வேண்டும்.

முழுப்படமும் அதே மாதிரியாக வந்திருக்கும்.




இப்போது அடிப்படை வண்ணம் ( பேஸ்கலர் ) என்னவோ அதை நாம் அடித்தள  வண்ணமாக போட வேண்டும்.

இவ்வண்ணம் எளிதில் காயாது. எனவே வண்ணங்களை அழகாக ( மெர்ஜ்) இணைத்து புது வண்ணமாக தீட்டும் வசதியுண்டு, எளிதில் முடிக்க முடியாத கடினமும் உண்டு. 50/50 - எதில் இல்லை சொல்லுங்க.






அடித்தளமாக தீட்டிய கலர் காய குறைந்தது 3 அ 5 நாட்கள் ஆகும். ஆனால் குளிர் காலத்தில் கூடுதல் நாட்கள் ஆகும். வெயில் காலத்தில் கேட்கவே வேண்டாம் சீக்கிரம் தான். ஆனால் நன்றாக காயாமல் அவசரப்பட வேண்டாம்.

நாம் வரையும் வண்ணத்தை தீட்ட வேண்டும்.

முதலில் மேல் இருந்து வரைந்து வர வண்ணம் கையில் ஒட்டாது.

கருப்பு வண்ணத்திற்கும் , வெள்ளை வண்ணத்திற்கும் தனித்தனியாக தூரிகை வைத்துக் கொள்வது நலம்.

லின்சிட் ஆயில் என்கிற மீடியம் கிடைக்கிறது. இதனுடன் அதை சேர்த்து சற்று இளக்கமாக்கிக் கொள்ளலாம்.







ஓவியம் வரையும் போது கையில் ஒட்டாம எப்படி...? ஆமா ஒட்டும் தான்.

நிறைய ஒட்டாது இல்ல.. அதான் இந்த யோசனை.







பொறுமையாக செய்ய வேண்டும். அதுதான் இதில் முக்கியம். என்னடா இது ஒரே படத்தை எவ்வளவு நாள் போட்டுக்கிட்டே..... இருப்பது என்று தோன்றும்... என்ன செய்வது....  வேண்டுமானால் வேறு படத்தையும்  side by side போட்டுக்கலாம். இதெல்லாம்  எங்களுக்கு தெரியாதா...?  நீ விஷயத்துக்கு வா அப்படிங்கிறீங்க.... வந்துட்டேன்.

அழகாக கலர்  ஏற ஏற மனம் சந்தோஷத்தில் துள்ளும்.
மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும்.


ஒன்றை உருவாக்குவதில் உள்ள மகிழ்ச்சியே அலாதியானது தான்.

ஓவியம் ஒரு சிறந்த தியானம். மனம் அப்படியே லயித்து விடும் அல்லவா...?

வண்ணக்கலர்களை பார்க்கும் போது ..... வரும் உணர்ச்சியை என்னவென்று சொல்வதுன்னு...தெரியவில்லை




இப்படத்தை நான்  ஜீலை 2012 லில் வரைந்தேன்.


இதே போல் நீங்களும் வரையலாம்.





15 comments:

  1. வணக்கம்
    சகோதரி.
    கையில் சமையல் கலை மட்டுந்தான் என்று நினைத்தேன் ஆனால் அழகிய ஓவியம் வரையும் கலையும் தெரியும் என்பதை படத்தின் வழிஅறிந்தேன் பகிர்வுக்கு நன்றி.. மிக அழகாக உள்ளது த.ம 1வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நன்றி ரூபன் அவர்களே.

    ReplyDelete
  3. வண்ணங்களுக்கு பிரசித்தமான ஜெய்ப்பூர் மக்களைக் கொண்டு அழகானதொரு வண்ண ஓவியம். உங்கள் பொறுமைக்கும் கலைத்திறனுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள் உமையாள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி கீத மஞ்சரி.

      Delete

  4. வணக்கம்!

    சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் வாய்ப்பழக்கம்!
    முத்திரையாய்ச் சொன்னேன் முடிவு!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  5. வாவ் சூப்பரா இருக்கு.அழகான ஓவியம். அழகான விளக்கமும் கூடவே. எத்தனை திறமைகள் உங்களுக்குள். பாராட்டுக்கள்+வாழ்த்துக்கள் உமையாள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க.வாங்க என்ன ஆளையே காணோம்...? நன்றி பிரியசகி

      Delete
  6. கைவினை பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ் அவர்களே.

      Delete
  7. ஓவியம் வரைவது ஒருகலை அதை பிறரும் வரைய கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற மனப்பான்மைக்கு பாராட்டுக்கள், எனக்கு ஓவியம் ரசிப்பதில் சிறு வயது தொடங்கியே மிகுந்த ஆர்வம் உண்டு எனது புதிய பதிவு Fantastic France பாருங்கள் அதிலும் ஓவியங்களின் புகைப்படங்கள் இணைத்திருக்கிறேன் ஆனால் படம் வரைவதை நிறுத்தி விட்டேன் காரணம் பொருமையாக ஒரு குதிரையை பார்த்துக்கொண்டே படம் வரைந்தேன் முடிந்தவுடன் நண்பரிடம் காண்பித்தேன் நண்பர் சொன்னார் கழுதை அருமையாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி முதல்ல கழுதையாக வந்தாலும்,தொடர்ந்து வரைய வரைய குதிரையாக வந்து விடும். முயற்சி செய்யுங்கள்.

      நன்றி.

      Delete
  8. எனக்கும் ஓவியத்துக்கும் ரொம்பவே தூரம் அதிகம்.
    உங்களோட இந்த ஓவியங்களை பார்க்கும்போது, மிகவும் ஆச்சிரியமாக இருக்கிறது. பல முகங்கள் கொண்ட உங்களுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. நன்றி சொக்கன் அவர்களே

    ReplyDelete
  10. அருமையான ஓவியங்கள்

    ReplyDelete