Saturday, 15 November 2014

இனிப்பு & உப்பு ஆப்பம்
ஆப்பம் சாப்பிட
ஆசையா...
அன்புடன் சுவைக்க
ஆசையா...


இனிப்பு உப்பு ஆப்பத்தை
தேங்காய் பாலில் ஊறவிட்டு
திகட்டிட உண்ண
ஆசையா...


அம்மா கையின் நினைவினிலே
அமர்ந்து உண்ண
ஆசையா...

அன்புடன் இல்லாளை
அழைத்திட்டே...
ஆசையாய் நீவீர் கேட்டிடவே

அன்பைக் கலந்தே
ஆப்பத்தை..
ஆசையாய் படைப்பார் உம்முன்னே...

விரலில் கிள்ளிய ஆப்பத்தை
விழுங்குவீர் மறந்தே உலகத்தை
சாதனை படைத்த மகிழ்வுடனே
மனையாள் பூத்து நிற்பாளே...!!!

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி - 3 கோப்பை
பச்சரிசி - 1 கோப்பை
உளுந்து - 1/2 கோப்பை
வெந்தயம் - 1 தே.க

இவை அனைத்தையும் ஊறவைத்து முதல் நாள் ஆட்டி உப்பு போடாமல் கெட்டியாக கரைத்து வைக்கவும்.

அடுத்த நாள் காலை இந்த மாவில் பாதியை  எடுத்துக் கொள்ளவும். கருப்பட்டி வெல்லம் இரண்டும் சேர்த்து 3/4 ல் கோப்பை எடுத்துக்கொண்டு நனைய சிறிது நீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைக்கவும். பின் வடிகட்டி மாவில் விட்டு கரைக்கவும். 
 1சிட்டிகை உப்பு,1 சிட்டிகை சுக்கு,சிறிது ஏலம் சேர்த்து கலக்கவும்.   


ஆப்பச்சட்டிசற்று சூடானவுடன்
மாவைஊற்றவும்

 ( சட்டி சூடு இல்லாமலும் இருக்கக்கூடாது, அதிகமான சூட்டுடனும் இருக்கக் கூடாது )

சட்டியை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு ஒரே பக்க சாய்வாக மாவை வட்டமாக சுற்றிக் கொண்டு வரவேண்டும்.

மூடி போட்டு வேக விடவும்.


 வேகவும் எடுக்கவும்.

 மீதிமாவில் சிறிது உப்பு போட்டு சிறிது நீர் விட்டு கலக்கி,
இதே போல் வெள்ளை ஆப்பத்தையும் வார்க்கவும்.
தேங்காய் பால்

தேங்காய் இருந்தால் நன்கு துருவிக் கொண்டு மிக்ஸியில் சிறிது நீர் விட்டு முதல் பால்,இரண்டாம் பால்,மூன்றாம் பால் என எடுக்துக் கொள்ளவும். பின் கலக்கவும்.

இல்லை என்றால் டின் பால் உபயோகிக்கவும்.

1 டின் பாலுக்கு வெல்லம் + கருப்பட்டி 2:2 என சேர்த்துக் கொள்ளுங்கள்.
சிறிது ஏலம் + சுக்குப்பொடி சேருங்கள் சர்க்கரை ( sugar)யும் சேர்க்கலாம்.

அப்பாடியோவ்....ஒரு வழியா ஆப்பத்தை பண்ணியாச்சு.....தேங்காய் பாலும் சும்மா கமகமன்னு தாயார்.....

இரண்டு வகையான ஆப்பத்தையும் தனித்தனியாக  2 பேஸனில் வைத்து சாப்பிட 15 நிமிடங்களுக்கு முன்பாக தேங்காய் பாலில் ஊறவிடவும்.
பின் சாப்பிடும் போது தேங்காய் பால் சேர்த்துக் கொள்ள என பால் தனியாகவும் வைத்துக் கொள்ளவும். ஊறிய ஆப்பம் சும்மா சூப்பராக இருக்கும். என் அம்மா இப்படி செய்தால் தான் ருசியாக இருக்கும் என பொறுமையாக எடுத்து செய்வார்கள்.

ஊறவைக்க வில்லை என்றாலும் தட்டில் சேர்த்தும் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.


இனிமே நோ....டிலே....வேற என்னங்க சாப்பிட வேண்டியதுதான்.

ஒரு தம்பி இதை விரும்பிக் கேட்டு பல நாட்கள் ஆகிவிட்டது. ஆப்பச் சட்டி இல்லாமல் தான் பதிவிட முடியவில்லை. ஊருக்கு போன போது மறக்காமல் எடுத்து வந்தேன். ஊருக்கு போய் வந்து இவ்வளவு நாள் ஆச்சுன்னு கேட்குறீங்க சரிதானே... என்ன செய்றது...அது அதற்கு....ன்னு  ஒரு நேரம் வரனும் இல்லையா... பொறுமையாக ரசித்து செய்ய வேண்டும் அல்லவா..?

இப்போதான் எனக்கு திருப்தியாக இருக்கு.


24 comments:

 1. ஆப்பத்துலயே கவிதையா ? ஸூப்பர்

  ReplyDelete
 2. ஆஹா.... ஆப்பம் செய்யிறதை சொல்லுறதுக்கு முன்னால ஆப்பம் சாப்பிடும் ஆசையை கவிதையால் கிளறி விட்டுட்டீங்க... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆப்பம் செய்யிறதை சொல்லுறதுக்கு முன்னால ஆப்பம் சாப்பிடும் ஆசையை கவிதையால் கிளறி விட்டுட்டீங்க.///

   ஹஹஹஹா...அப்படியா சொல்லுறீங்க சகோ

   Delete
 3. உமையாள்காயத்ரி,

  எங்க வீட்டிலும் வாரம் ஒருநாள் ஆப்பம் & தேங்காய்பால்தான்.

  இனி ஆப்பம் என்றாலே உங்க ஆப்பக்கவிதைதான் நினைவுக்கு வரப்போகிறது. ரெண்டு ஆப்பங்களும் ஜோரா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. இனி ஆப்பம் என்றாலே உங்க ஆப்பக்கவிதைதான் நினைவுக்கு வரப்போகிறது //

   அடடே பரவாயில்லை இப்படியாவது நினைவில்...

   ஆப்பங்களும் ஜோரா இருக்கு. // நன்றி

   Delete
 4. ஆப்பம் பற்றி அருமையாய் சுவையாய் பகிர்வுக்குப்பாராட்டுக்கள்.!

  ReplyDelete
 5. எத்தனயோ ரெசிப்பி ட்ரை பண்ணிட்டேன் இந்த ஆப்பம் எனக்கு எட்டா உணவு !!
  உங்க ரெசிப்பி செய்து பார்க்கிறேன் ..நான் வைத்திருப்பது non stick சட்டி ..அதிலும் நல்ல வருமா !இப்படி ஓட்டை எல்லாம் நிறையா !!

  ReplyDelete
  Replies
  1. உங்க ரெசிப்பி செய்து பார்க்கிறேன் ..நான் வைத்திருப்பது non stick சட்டி ..அதிலும் நல்ல வருமா !இப்படி ஓட்டை எல்லாம் நிறையா !! //

   நல்லா வரும். நானும் நான்ஸ்டிக்ல தான் செய்தேன். ஓட்டை எல்லாம் வரும்.

   மாவு தான் நிறைய தண்ணீராகவும் கூடாது, அதே சமயம் ரெம்ப கெட்டியாகவும் கூடாது.

   இரண்டு சுட்டு பார்த்தால் தன்னால் வந்து விடும் தோழி. எளிது தான். நிச்சயம் உண்டு
   மகிழ்ந்து பின் சொல்லுங்கள். என்ன சரியா..

   Delete
 6. வட்ட வட்ட அப்பம்
  அம்மா சுட்ட அப்பம்
  என்று சொல்லி
  அப்பச் செய்முறையைப் படித்தேன்.

  சிறந்த பதிவு
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. வட்ட வட்ட அப்பம்
   அம்மா சுட்ட அப்பம்//


   நன்றி ஐயா

   Delete
 7. ஆப்பத்துக்காக கவிதையா?..
  கவிதைக்காக ஆப்பமா?..

  //என் அம்மா இப்படி செய்தால் தான் ருசியாக இருக்கும் என பொறுமையாக எடுத்து செய்வார்கள்.//

  அருமை.. அருமை!..

  தாய்வழி வந்த எதுவும் தத்துவமானது!..

  ReplyDelete
  Replies
  1. ஆப்பத்துக்காக கவிதையா?..
   கவிதைக்காக ஆப்பமா?..//

   ஆப்பத்துக்காகத் தான் கவிதை...

   எல்லாம் எழுதி முடித்தவுடன் முதல் படம் பார்க்கவும் கவிதை வந்தது. முதலில் போட்டு விட்டேன்.

   தாய்வழி வந்த எதுவும் தத்துவமானது!.. ஆம் ஐயா.

   Delete
 8. ஆப்பம் சுவையான உணவு! பகிர்வுக்கு நன்றி! கவிதையும் சிறப்பு! நன்றி!

  ReplyDelete
 9. ஆப்பத்திற்கே கவிதையா! அருமை சகோதரி! இது தமிழ் நாட்ட்டு ஆப்பம். கேரள ஆப்பத்தில் பச்சரிசியும், தேங்காயும் சேர்த்து அரைப்பார்கள் சிறிது ஈஸ்டும் சேர்ப்பார்கள். தேங்காய் தண்ணீர் இல்லது இளனீர் சேர்ப்பதுண்டு. மற்ர படி எல்லாமே அ;தே அதே!!

  பகிர்வுக்கு மிக்க நன்றி!!!

  ReplyDelete
  Replies
  1. இது தமிழ் நாட்டு ஆப்பம் //

   ஆம் சகோ அதே அதே...

   நீங்க இரண்டு மாநில உணவையும் ருசிக்கிறீர்கள்.

   Delete
 10. ஆப்பத்தை விடவும் கவிதை இனிப்பாக இருக்கும்போல் உள்ளது. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஆப்பத்தை விடவும் கவிதை இனிப்பாக இருக்கும்போல் உள்ளது.//

   அப்படியா ஐயா.. வாருங்கள் வாருங்கள்

   தங்கள் முதல் வருகைக்கு மகிழ்கிறேன்

   நன்றி.

   Delete
 11. ஆப்பத்தை விட கவிதை சூப்பர் ஆக இருக்கே.

  ReplyDelete
 12. பார்த்தது கவிதையை!!! அட குறிப்பில்லையா?? ஏமாற்றம்.
  ஆவ் கீழே ஆப்பத்திற்கான குறிப்பு.!!! மிக்க மகிழ்ச்சி. சொல் இல்லை.செயல்தான்.
  நன்றி.

  ReplyDelete
 13. பார்த்தது கவிதையை!!! அட குறிப்பில்லையா?? ஏமாற்றம்.//

  இப்படியா...நினைத்தீர்கள்...ஹஹஹா..

  ReplyDelete