காப்பி பிரியர்களே....வாருங்கள்
ஒரு கோப்பை குளம்பி அருந்தலாமா...?
நீ கூப்பிட்டுவிட்டாய்....காப்பின்னு வேற சொல்லிட்ட...அப்புறம்...அது வந்து
என்ன காப்பிம்மா...
புரூ காப்பியா...இல்லை..சன்ரைஸா...வேற ....ம்ம்....நெஸ்கேப் என்ன கரைக்கிட்டா...இரு.. இரு...பில்டர் காப்பி....?
சுவைத்துக் குடிக்கையில்...அஹா...அந்த நிமிடங்கள்....பிலீஸ் தொந்தரவு செய்யாதீர்கள்....
நீ என்ன சும்மா இல்லாமா இப்போ ஆசையை கிளப்பிட்ட... என நினைப்பவர்கள் ....
ஒருகையில் காப்பியுடன் படிக்க...
பசும்பால்
கொதிக்கையிலே
கரண்டியால் கலக்கிடவே
சுண்டித் துள்ளிடவே
கோப்பையிலிடுவீர்
மதியோடு
வெண்சர்க்கரை மேலிட்டு
கள்ளிச் சொட்டாய்
டிகாசனைப் பாவி
இரு பாத்திரம் மாற்றி
விளையாடினால்...
நுரைக்க மணக்க
நுகர்வோடு ருசிக்க
கோப்பையில் குளம்பி
பொங்கிச் சிரிக்கும்
மூக்கில் முத்தமிட்ட நுரைக்கும்
அதரங்கள்
அப்பிக் கொண்ட
நுரைப் பூச்சுக்கும்
மறைவாய் வெட்கி
துடைக்கையிலும்
ஆனாலும்...
குழந்தையாய் குதூகலித்து
குளம்பியை
விடாது சுவைக்கையில்
ஆனந்தம் பரமானந்தம் தான்...!!!
என்னங்க ரசனைக்காரர்களே...என்ன சொல்கிறீர்கள்.....?
படங்கள் கூகுள் நன்றி
//அதரங்கள்
ReplyDeleteஅப்பிக் கொண்ட
நுரைப் பூச்சுக்கும்
மறைவாய் வெட்கி// பில்டர் காப்பி ஆவ் :)எனக்கும் அப்படி நடந்திருக்கு !
குளம்பி ஆசையை இப்படி சொல்லி என்னை கிள(ம்)ப்பி விட்டீங்களே !! இங்கே பக்கத்தில் சரவன் பவன் கூட இல்லை :)
குளம்பி ஆசையை இப்படி சொல்லி என்னை கிள(ம்)ப்பி விட்டீங்களே இங்கே பக்கத்தில் சரவன் பவன் கூட இல்லை :) //
Deleteஅடடா...நீங்களே தான் காப்பி கலந்துக்கனும் ...ஜோராக ஒரு கோப்பை அருந்துங்கள்..
உமையாள்,
ReplyDeleteஇதோ போய்ட்டு, ஒரு கோப்பை குளம்பியுடன் வர்றேன்.
காபிக்கும் ஒரு கவிதையா ! நல்லாருக்குங்க.
இதோ போய்ட்டு, ஒரு கோப்பை குளம்பியுடன் வர்றேன்...
Deleteவாங்க வாங்க
காபி சூப்பர்!! வேறென்ன சொல்ல:))
ReplyDeleteமைதிலி சொன்னா சரிதான்...வேறென்ன சொல்ல:))//
Deleteஆனந்தம்... பரமானந்தம்...
ReplyDeleteஆனந்தம்... பரமானந்தம்.
Deleteஆம் சகோ
ஆஹா..
ReplyDeleteகாலையில் சுவையான காபி!..
அருமை.. அருமை!..
காலைல முதல்ல அது தானே வேணும்...ஐயா நன்றி
Deleteஅருமை
ReplyDeleteவாருங்கள் வாருங்கள்...தங்களின் முதல் வரவுக்கு மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி ஐயா
Deleteஒரு எழுத்தாளரின் எழுத்தில் பார்த்தேன் ,காபி எங்கிருந்து வருகிறது என்றால் கடையிலிருந்து எனச்சொல்லத்தெரிந்த சின்னப்பிள்ளைகளுக்கு கடைக்கு எங்கிருந்து வருகிறது எனச்சொல்லத்தெரியவில்லை.
ReplyDeleteசகோ தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என எனக்கு கொஞ்சம் விளக்குங்களேன்.
Deleteநன்றி.
ஒன்றுமில்லை பெரிதாக ,ஒரு பொருள் எங்கிருந்து வருகிறது என்பதை இன்றைய இளம் தலை முறையினர் பெரும்பாலுமாய் உணர்வதில்லை.எனக்கூறியிருந்தார் அந்த எழுத்தாளர்,அதைத்தான் குறிப்பிட்டேன்,மற்றபடி காப்பிபற்றி ஒன்றும் குறைகூறவில்லை.நல்ல பதிவு வாழ்த்துக்கள்./
Deleteநீங்கள் பேசாமல், இந்த குளம்பிக்கு விளம்பர தூதுவராக மாறிவிடலாம்.
ReplyDeleteஅடடா..பரவாயில்லையே...கைவசம் ஒரு வேலைக்கு வாய்ப்பு இருக்கிறதுன்னு ....கேட்கவே நல்லா இருக்கே...ஹஹஹஹா...நன்றி சகோ
Deleteஎழுந்தவுடன் கோப்பி குடிக்காவிட்டால் அன்றைய பொழுது விடியாத மாதிரி இருக்கும். இப்போ நீங்க வேற கவியில் கோப்பி கலக்கிவிட்டீர்கள். 2வது குடிக்கப்போகிறேன். சூப்பர் கவிதை.
ReplyDelete//மூக்கில் முத்தமிட்ட நுரைக்கும்
அதரங்கள்
அப்பிக் கொண்ட
நுரைப் பூச்சுக்கும்// ஊரில் பில்டர்கோப்பி குடிக்கும்போது சொன்னது அனைத்துமே நடந்திருக்கு.இங்கு cuppuccino குடிக்கும்போது இதே நிலமை.நன்றி உமையாள்.
இங்கு cuppuccino குடிக்கும்போது இதே நிலமை//
Deleteநல்லா நுரையில....அழகு படுத்தி தருவார்கள்...பார்க்கவே அழகாக இருக்கும். காப்பியில் கைவேலைப்பாடு....அதிசயித்து இருக்கிறேன்
எழுந்தவுடன் கோப்பி குடிக்காவிட்டால் அன்றைய பொழுது விடியாத மாதிரி இருக்கும்.
ஆம் அப்படித்தான்...எனக்கும் நன்றி
Deleteசுவையா இருக்கு காபி கவிதை! நானும் காபி குடிச்சுட்டு வரேன்! ஹாஹாஹா! நன்றி!
ReplyDeleteசுவை மாறும் முன் காப்பி சுவைக்க கிளம்பியாச்சா சகோ..
Deleteகாப்பிக்கோர் கவிதை அருமை ஆனால் குடிக்கத்தான் முடியலை.
ReplyDeleteஓரு கோப்பை காப்பி கலந்துக்குங்க சகோ
Deleteகாபியை ரொம்பவே ரசிச்சுக் குடிச்சிட்டேன் போலிருக்கு .சத்தம் வராம குடிங்க என்கிறாள் என்னவள் :)
ReplyDeleteத ம 1
நீங்க அவர்களை விட்டு விட்டு ரசித்து குடித்தீர்கள் என்றால் அப்புறம் சொல்லாம என்ன செய்வார்கள்.?
Deleteகள்ளிச் சொட்டாய்
ReplyDeleteடிகாசனைப் பாவி
இரு பாத்திரம் மாற்றி
விளையாடினால்...
என்ற வரிகளை ரசித்தேன். காஃபி கவிதை நல்ல சுவை!
த.ம.4
நன்றி ஐயா
Deleteகுளம்பிக்கு ஒரு கவிதை
ReplyDeleteகுழப்பமில்லாச் சுவையுடன்...
அருமை சகோதரி.
குழப்பமில்லாச் சுவையுடன்.//
Deleteஆம் சகோ
ரசித்துக் கொடுத்ததை
ReplyDeleteரசித்துக் குடித்தேன்
வாழ்த்துக்கள்
ரசித்துக் கொடுத்ததை
Deleteரசித்துக் குடித்தேன்//
நன்றி ஐயா
tha.ma 6
ReplyDeleteகுளம்பி இங்க வரை மணக்குதுங்க....குளம்பிப் பிரியர்கள்....
ReplyDeleteஅருமை அருமை...அதுவும்// இரு பாத்திரம் மாற்றி
விளையாடினால்...// ஆத்திக் குடிப்பதற்கு ஆஹா எப்படிப்பட்ட வரிகள்...சூப்பர்...
அப்புறம் நுரை மூக்க்குலயும், உதட்டுக்கு மேல ஒட்டி மீசை மாதிரி...அதை வெட்கப்படுத் அதுவும் அங்கயும் இங்கயும் பார்த்துத் துடைக்கும் பொது....சே....நீங்களும் எங்களை மாதிரி அனுபவசிருக்கீங்க போல ,....அதான் கவிதை வடிவில்...
குளம்பி இங்க வரை மணக்குதுங்க....குளம்பிப் பிரியர்கள்....//
Deleteஆமாங்க அதை நினைக்கும் போதே மணக்க ஆரம்பித்து விடும் அல்லவா..?
நீங்களும் எங்களை மாதிரி அனுபவசிருக்கீங்க போல ,....அதான் கவிதை வடிவில்...//
நிறைய பேர் இது மாதிரி இருப்பார்கள் அல்லவா ஹஹஹா...
நன்றி