Thursday, 27 November 2014

மனமீர்த்த மாதவாபதில் சொல்...!!!





போதைவிழி  காட்டிபேதை  எனைக்கொள்வது  முறையோ
கார்சுருள்  கலைந்தாடி  எனைத்தழுவல்  முறையோ
விரைந்தோடி  யான்வர  விரலாட்டிசைப்பது   முறையோ
அழகுகீரீட  மயிலிறகுசூட்டி  மனம்கவரல்  முறையோ
எனைநோக்கா  விழியெதை  யோக்குதுஇது  முறையோ
மென்சிரிப்பி  லென்னை  மோகத்தீயிலிடுவது  முறையோ
கோபிச்சந்தன  மணமென்னிலை  மறக்கச்செய்வது  முறையோ
மனமீர்த்த  மாதவாபதில் சொல்











மீண்டும் என்னுள் நீ கலந்து வந்தாய் கவியாய் நன்றி கண்ணா..

படம் கூகுள் நன்றி




23 comments:

  1. மாதவா...
    கண்ணா...
    அருமையான பாடல்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உடன் வந்து பதிலுரைத்த சகோதரரே நன்றி.

      Delete
  2. போதைவிழி, மென்சிரிப்பு இந்த வார்த்தைகளே போதையூட்டுதே, கண்ணனை நினைத்தாலே பாடல் பூத்துவிடுமோ..!

    ReplyDelete
    Replies
    1. போதைவிழி, மென்சிரிப்பு இந்த வார்த்தைகளே போதையூட்டுதே //

      அவன் அவ்வளவு அழகல்லவா...

      கண்ணனை நினைத்தாலே பாடல் பூத்துவிடுமோ..! //

      ஆம்...அவ்வாறு தான் பூத்துக் கொண்டுருக்கிறது...நன்றி

      Delete
  3. அந்த மாதவன் தங்களுக்கு பதில் சொல்லாமல் வேறு யாருக்கு சொல்லுவான் சகோ.
    அருமை. படமும் கொள்ளை அழகு.

    ReplyDelete
    Replies
    1. ஆம். படம் கொள்ளை கொள்ளும் அழகோ அழகு சகோ

      நன்றி

      Delete
  4. சே.குமார் உடன் வந்து பதிலுரைத்து விட்டார் ,சரி ...ராதையாய் நீங்கள் மாறி கண்ணனிடம் முறையோ என்று கேட்ட கேள்விக்கு என்று வருமோ பதில் :)
    த ம 1

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோ உடனே வந்து விட்டார்..

      ராதையாய் நீங்கள் மாறி கண்ணனிடம் முறையோ என்று கேட்ட கேள்விக்கு என்று வருமோ பதில் ://

      ஆம் என்றோ தெரியவில்லையே....ஆனால் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்க வேண்டியது தான் என் வேலை. எப்போதாவது அவன் காதில் விழும் அல்லவா..? நம்பிக்கையுண்டு.

      Delete
  5. கண்ணனிடம் முறையோ என்ற தங்கள் கேள்விகள் அருமை...சகோதரி!

    ReplyDelete
  6. வணக்கம்
    சகோதரி

    இரசிக்கவைக்கும் பாடல்பகிர்வுக்கு நன்றி த.ம4
    எனது பக்கம்ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்.(சிறுகதை-2 நிறைவுப்பக...:   

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. ஏக்கம் நிறைந்த வார்த்தை ஜாலங்கள் அருமை தோழி!
    வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  8. கண்ணனின் பதில் கிடைக்கட்டும்,

    ReplyDelete
  9. கோபி சந்தனம் என மணக்கின்றது - கவிதை!..
    சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்..

    ReplyDelete
    Replies
    1. சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்..//

      Delete
  10. மாதவன் கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. இன்றைய வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்.
    http://blogintamil.blogspot.com.au/2014/11/blog-post_28.html?showComment=1417134527203

    ReplyDelete
    Replies
    1. சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்..//

      தகவலுக்கு நன்றி சகோ

      Delete