Thursday, 7 May 2015

சாயிமாதா







ஓம் பகவதி சாயிமாதா
ஜெகமே நீதான் சாயிமாதா
அருளின் மழைநீ சாயிமாதா
அன்பின் கொடைநீ சாயிமாதா

சாயிமாதா சாயிமாதா
சாயிமாதா சாயிமாதா

இன்பம் நீதான் சாயிமாதா
இருளைக் களைவாய் சாயிமாதா
உடலின் உயிர்நீ சாயிமாதா
உன்வசம் நான்தான் சாயிமாதா

சாயிமாதா சாயிமாதா
சாயிமாதா சாயிமாதா

தென்றலின் சுகம்நீ சாயிமாதா
தேடிய குருநீ சாயிமாதா
உன்னுரு கண்டேன் சாயிமாதா
உண்மையை உணர்ந்தேன் சாயிமாதா 

சாயிமாதா சாயிமாதா
சாயிமாதா சாயிமாதா





நன்றி சாய்நாதா...

படம் கூகுள் நன்றி

13 comments:

  1. குருநாதர் தரிசனம் அருமை!..

    ஓம் சாயி நாதா சரணம்.. சரணம்!..

    ReplyDelete
  2. குருவுக்கு என் குருவார வந்தனங்கள்.

    ReplyDelete
  3. சாயியின் அற்புதங்கள் காணுவீர் மேலும் வாழ்த்துக்கள் ...! அருமை பதிவுக்கு நன்றி !

    ReplyDelete
  4. வழக்கம்போல சாயிமாதாவைப் போற்றும் அழகான கவிதை மனதில் பதிந்தது.

    ReplyDelete
  5. சாயி சரணம் அருமை
    தமிழ் மணம் 4

    ReplyDelete
  6. சிறந்த பக்திப் பா வரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரி.

    கருணை ததும்பும், குருவின் தரிசனமும், பக்தியுடன் தொடுக்கும் பா மாலைகளுடன் ௬டிய தங்கள் பதிவு, குரு வாரந்தோறும் கண்களுக்கு விருந்தளித்து மனதிற்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தப்பாமல் தருகிறது சகோதரி.! குருவின் அருளில் தாங்கள் தொடர்ந்து திளைத்து இதுபோல் எங்களையும் மகிழ்விக்க வேணுமாய், குருவின் பாதங்களை நமஸ்கரித்து வேண்டிக் கொள்கிறேன். குருவே என்றும் துணை.! அருமையான.பகிர்வுக்கு நன்றி.!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  8. https://soundcloud.com/meenasury/ombhagawathisayeematha
    Listen to your song the Divine Prayer here, Madam.
    Thank U so much.
    Dedicated to all sayee devotees.
    subbu thatha

    ReplyDelete
  9. சாய்ராம் சரணம்!

    ReplyDelete