Sunday 9 November 2014

வானத்தின் முகவரி



முகவரி மாறியது
வானத்தில்
மழை.

கையில் கடிதம்
தட்டியது கதவை
இடி

விலாசத்தை தேட
விளக்கு ஒளிர்ந்தது
மின்னல்

தோய்ந்தது மேகம்
சிறு கண்ணீர் தூறல்
விலகியது இடம் விட்டு
தேடலின் துவக்கம்




படம் கூகுள் நன்றி

27 comments:

  1. தற்குறிப்பேற்றம் அருமை
    த ம 1

    ReplyDelete
  2. வானத்துக்காக வார்த்த கவி அருமை.

    ReplyDelete
  3. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. தேடலின் துவக்கமே எங்கும் பிள்ளையார் சுழி இடுவதாக/

    ReplyDelete
  5. Replies
    1. வாருங்கள்,.கருத்திட்டமைக்கு நன்றி சகோ

      Delete
  6. வானத்துக்காக உருவாக்கப்பட்ட கவிதை மிக அருமை !!

    ReplyDelete
  7. அருமையான கற்பனை. பாராட்டுகள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. ம்ம்.. ஒவ்வொரு வரியும் ரசனை. நானும் வெவ்வேறு கோணத்தில் யோசிக்கிறேன்.

    ReplyDelete
  9. உமையாள்காயத்ரி,

    உங்கள் கற்பனை அழகா இருக்கு. படமும் அருமை.

    ReplyDelete
  10. ஆஹா! மழையாய் கவிதை!!

    ReplyDelete
  11. wow அருமையான வித்தியாசமான கற்பனை தோழி அசத்திட்டீங்க !

    ReplyDelete
  12. வணக்கம் சகோதரி!

    கற்பனையில் மிளிர்ந்த கவியின் வரிகள் வெகு சிறப்பானவை! ரசித்தேன்.
    வாழ்த்துக்கள்.

    நட்புடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  13. ஆஹா, இதுவல்லவா கவிதை. அருமை. ரசித்தேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. "தோய்ந்தது மேகம்
    சிறு கண்ணீர் தூறல்
    விலகியது இடம் விட்டு
    தேடலின் துவக்கம்" என்ற
    வரிகளை விரும்புகிறேன்!

    சிறந்த பா வரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete
  15. “முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ?
    முகவரிகள் தொலைந்ததனால் அழுதிடுமேர் அதுமழையோ?“ - வைரமுத்து.
    சாயல் இருந்தாலும் அதன் தொடர்ச்சியான கற்பனை முழுவதும் அழகு! தொடருங்கள் சகோதரி. மற்றவற்றைக் காட்டிலும் இயற்கை வருணனைக் கவிதை உங்கள் சிறப்பு.

    ReplyDelete
  16. அழகு கவிதை! எங்களுக்கு கவிதை எல்லாம் எழுத வரதே இல்லைங்க! ஹஹ்

    ReplyDelete
  17. எங்களுக்கு கவிதை எல்லாம் எழுத வரதே இல்லைங்க! ஹஹ்//

    என்ன இப்படியெல்லாம் சொல்லுறீங்க...சூப்பரா கவிதைகள் போட்டு அசத்திட்டீங்களே..

    ReplyDelete