இட்லி மீந்து போனா நம்மளால சும்மா சாப்பிட முடியுதா...?
இட்லி உப்புமா...செய்து சாப்பிடுவோம்..
அதுவும் போர் அடித்தால்...?
வேற என்னங்க மசால் இட்லி செய்து சாப்பிட்டு பார்ப்போம்..என்ன நான் சொல்லுறது...?
தேவையான பொருட்கள்
இட்லி - 10
வெங்காயம் பெரிது - 1
தக்காளி பெரிது - 1
கருவேப்பிலை - சிறிது
சாம்பார் பொடி - 1தே,க
மஞ்சள் தூள் - சிறிது
பொட்டுக்கடலை + சோம்பு + வரமிளகாய் சேர்த்து அரைத்த பொடி - 1 தே.க
உப்பு - சிறிது
தாளிக்க வேண்டியவை
எண்ணெய் - 1 1/2 தே.க
கடுகு - 1/4 தே.க
க.பருப்பு - 1/2 தே.க
உ.பருப்பு - 1/2 தே.க
தாளிக்கவும்
வெங்காயம் + கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
தக்காளி சேர்த்து வதக்கவும்
உப்பு, பொடிகளை சேர்த்து வதக்கவும். பச்சை வாசம் போன பின்
சிறிது நீர் தெளித்து கிரேவி மாதிரி செய்து கொள்ளவும்
நறுக்கிய இட்லி துண்டுகளை போட்டு கிளறவும்
சுவையான மசால் இட்லி ரெடியாகி விட்டது...!!!
இங்கே - இட்லி வகையறாக்கள் எல்லாம் உணவகத்தில் தான்..
ReplyDeleteஆனாலும், இட்லி வாங்கி வந்து - இதைப் போல செய்து பார்க்கலாம்..
வாழ்க நலம்..
இங்கே - இட்லி வகையறாக்கள் எல்லாம் உணவகத்தில் தான்.//
Deleteஇங்கு அந்த வாய்ப்பு இல்லை. நாங்கள் இருக்குமிடத்தில் இந்திய உணவகங்கள் கிடையாது.
என்ன ஆனாலும் நாமே தான் செய்து சாப்பிட வேண்டும்.
ஆனாலும், இட்லி வாங்கி வந்து - இதைப் போல செய்து பார்க்கலாம்//
மாறுதலுக்கு செய்து பாருங்கள் ஐயா நன்றி
வீட்டில் இட்லி செய்தால் மிச்சமாகும்.அப்போ செய்வதற்கு இது நல்ல குறிப்பாக இருக்கு. இதுக்காவே இட்லிக்கு ஊறவைக்கனும் போல.நன்றி உமையாள்.
ReplyDeleteவீட்டில் இட்லி செய்தால் மிச்சமாகும்.// ஆமாம். சில நேரங்களில் நான் இட்லி உப்புமாவிற்காகவே கூடுதலாக செய்வேன். சரி அதையே செய்கிறோமே என மாறுதலுக்கா இப்படி செய்தேன். அன்று காலை டிபன் சூப்பராக இருந்தது. அதான் பதிவாகி விட்டது.
Deleteஉடனே இட்லிக்கு ஊறவையுங்க சகோ ...நன்றி
ஆஹா, வெறும் இட்லியைவிட இட்லி உப்புமாதான் சுவையானது. இது அதைவிட இன்னும் சுவையாக இருக்கும் போலிருக்கே. தங்களின் மூளையில் நல்ல மஸாலா உள்ளது. :)
ReplyDeleteமஸாலா இட்லிப் பகிர்வுக்கு நன்றிகள்.
ஆஹா, வெறும் இட்லியைவிட இட்லி உப்புமாதான் சுவையானது.//
Deleteஆம் இட்லி உப்பு மாவின் சுவையே தனி தான். அதிலும் அடியில் சற்று பிடித்த மொறுமொறுப்பு + உ.பருப்பு சுவையோ சுவை தான்.
இது அதைவிட இன்னும் சுவையாக இருக்கும் போலிருக்கே//
ஆம் ஐயா வித்தியாசமான சுவையாய் சூப்பராக இருந்தது.
தங்களின் மூளையில் நல்ல மஸாலா உள்ளது. :) //
)))))))))...பாராட்டுக்களுக்கு நன்றி ஐயா
வணக்கம்
ReplyDeleteசுவையான உணவு.. செய்முறை விளக்கத்துடன் நனறு. பகிர்வுக்கு நன்றி த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சுவையான உணவு.//
Deleteஆம் சகோ முடிந்தால் செய்துண்ணுங்கள் நன்றி
ஒரு முறை முயற்சித்திருக்கிறோம். இட்லி ஃப்ரை செய்திருக்கிறோம் - ஹோட்டலில் தந்ததைப் பார்த்து! ஆமாம்... வெங்காயம் நாங்கள் கஷ்டப்பட்டு பொடியாய் நறுக்குவோம் ஒவ்வொரு முறையும். இதில் பெரிய இதழ்களாகவே போட்டிருக்கிறீர்களே... (என்னதான் சன்னமாய் வெந்து விடும் என்றாலும்!)
ReplyDeleteவெங்காயம் நாங்கள் கஷ்டப்பட்டு பொடியாய் நறுக்குவோம் ஒவ்வொரு முறையும். //
Delete))))......நானும் தான் சகோ அந்த லிஸ்டில்
இதில் பெரிய இதழ்களாகவே போட்டிருக்கிறீர்களே... //
இதில் மீடியமாக நறுக்கி இருக்கிறேன். அது உதிராமல் இருக்கவும் புகைப்படத்தில் இதழ்கள் போல் அவ்வாறு காட்சியளிக்கிறது. கரண்டியால் கிண்டவும் உதிர்ந்து விடும். இதற்கு இப்படி நறுக்கினால் தான் வெங்காயம் குழைந்து போகாமல் தெரியும். சாப்பிடவும்தனி ருசியாக இருக்கும் அது தான் சகோ அப்படி நறுக்கி இருக்கிறேன். நன்றி.
ஆஹா,
ReplyDeleteஇதை நிச்சயம் என்னாலே செய்ய முடியும் போல இருக்கிறதே!!!
செய்கிறேன்.
நன்றி.
Deleteஇதை நிச்சயம் என்னாலே செய்ய முடியும் போல இருக்கிறதே!!!
செய்கிறேன்.//
ஆஹா மிக்க மகிழ்வாக இருக்கிறது சகோ இதை கேட்க. நன்றி
வணக்கம் சகோதரி.
ReplyDeleteஅருமையான படங்களுடன், அழகாக செய்முறைகளையும் விவரித்து தாங்கள் செய்த மசாலா இட்லி வெகு நன்றாக இருந்தது. மிகவும் சுவையாகவும் இருக்குமென்று தோன்றுகிறது. நானும் வெறும் இட்லியை உப்புமா மாதிரி (வெங்காயம் மட்டும் சேர்த்து) செய்வேன் .இனி இந்த முறையையும் பின்பற்றுகிறேன். பகிர்வுக்கு நன்றி.
வெளியூர் பயணத்தில் பதிவுகளுக்கு கருத்துரை இடுவது தடைப்பட்டிருந்தது. வருந்துகிறேன். முன் பதிவுகள் எல்லாவற்றையும் படித்து பின் கருத்துரை இடுகிறேன். என் பதிவுக்கு தாங்கள் வந்து தந்த கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள் சகோதரி.
நட்புடன்,
கமலா ஹரிஹரன்.
நானும் வெறும் இட்லியை உப்புமா மாதிரி (வெங்காயம் மட்டும் சேர்த்து) செய்வேன் //
Deleteஆம் சகோ அடிக்கடி செய்வோம். அதற்கு சிறுசதலி எனக்கு உனக்கு என்று போட்டியே இருக்கும். ஹிஹிஹி...இப்போ கூட அப்படித்தான்
வெளியூர் பயணத்தில் பதிவுகளுக்கு கருத்துரை இடுவது தடைப்பட்டிருந்தது. வருந்துகிறேன். முன் பதிவுகள் எல்லாவற்றையும் படித்து பின் கருத்துரை இடுகிறேன்//
நேரம் இருக்கும் போது நிதானமாக பாருங்கள் சகோ. பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
ஆஹா... இது புதுசா இருக்குங்க...
ReplyDeleteசெய்து பார்க்க வேண்டும்... நன்றி...
ஆஹா... இது புதுசா இருக்குங்க...//
Deleteஆம் சகோ புதுசு தான்..சகோ உங்களுக்கு செய்து அசத்திவிடுவார்கள்.நன்றி
மசால் இட்லியை பார்க்கும் போது சாப்பிட தூண்டுகிறது சகோ.
ReplyDeleteசாப்பிட்டு விடுங்கள் சகோ . நன்றி
Deleteமீந்த இட்லியில் னிறைய செய்யலாம்தான்...இட்லி உப்புமா, பொடி இட்லி, இட்லி ஃப்ரை, இட்லி ஃபிரை வித் பொடி.....இட்லி ஃப்ரை வித் நீங்கள் சொல்லி இருப்பது போல் க்ரம் மசாலா சேத்து, மசாலா....இதெ இட்லி மசாலா ஆனால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பொடி பொட்டுக்கடலை, சோம்பு மிளாகாய் சேர்த்து பொடி செய்து இட்டதில்லை. செய்துட்டா போச்சு...
ReplyDeleteகீதா