தீபாவளி ஸ்வீட்.....!!!!! இவ்வளவு எளிதா பாதாம் அல்வா செய்வது...? அடடா...இந்த தீபாவளிக்கு....பாதாம் அல்வா தான்....என்பீர்கள் இந்தவீடியோவை பார்த்த பின்................!!!!!!!!!!!!!!!!!!! Subseribe to My Channel for even more delicious Dishes...Thank You.
செட்டி நாட்டு ஸ்பெஷல் ..... கருப்பரிசி மிக மிக நல்லதுன்னு உங்கள் எல்லோருக்கும் தெரியும்.அதுல பாயாசம்/கீர் செய்து சாப்பிடலாமா நண்பர்களே...அவ்வளவு சுவையாக இருந்தது. செய்வதும் மிக சுலபம். வாங்க வாங்க செய்முறையை பார்க்கலாம்.
இது பழம் பாதி....ஊறுகாய் பாதி.... இரண்டும் சேர்ந்த கலவை மீதி...!!! ஊறுகாய் அளவு கெடுதலும் இல்லை...! பழம் அளவு நல்லதும் இல்லை...! புதிய வடிவம்...புதிய சுவை... ஆஹா....பேஷ்...பேஷ்...ரொம்ப நல்லா இருக்கே...!!!
செட்டி நாட்டு கொத்தவரங்காய் பச்சடி......மதிய சமையலுக்கு ஏற்ற ஒன்று...! கொத்தவரங்காய் பிடிக்காதவர்கள் கூட இதை விருப்பி சாப்பிடுவார்கள். கொத்தவரங்காய் டயபடீஸ்க்கு மிகவும் நல்லது. எலும்பை வலுவாக்கும். இரத்த அழுத்தத்தை கட்டுப் படுத்தும். அதிக நார்சத்து கொண்டது. Please Subscribe my channel Thank you Friends....!!!
தொண்டை நமநமவென சளி பிடிப்பது போலிருந்தது. சரி ரசம் செய்யலாம் என நினைத்தேன். ஆனால் வழக்கமாய் செய்வது போல் இல்லாமல் வித்தியாசமாய் செய்யலாம் என நினைக்கும் போது பால்கனியில் வளரும் கற்பூரவள்ளி காற்றில் தலையாட்டி வாவா என அழைப்பு விடுத்தது. சரி என ஆசையாய் இலைகளைக் கிள்ளி எடுத்து வந்தேன். என்ன மணம்....காற்றில் சுகமாய்...பரவ நுகர்ந்தேன். கடவுள் என்னமாய் ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்றை மறைத்து வைத்து இருக்கிறார் இல்லையா.....?
காலை காப்பி,டீ என நாம் பருகும் பழக்கம்...ஆங்கிலேய காலத்தில் இருந்து துவங்கியது தான். ஆனால் முன்பு இந்த நீராகாரத்தை தான் பருகினார்கள். இதை நமக்கு பிடித்த மாதிரி கலந்து அருந்தலாம்.
கற்பக மூலிகைகளில் தூதுவளையும் ஒன்று. கொடியாக படரும். சிறுசிறு முட்கள் தண்டு, இலைகளில் காணப்படும். இதன் இலை, பூ,காய், வேரென அனைத்தும் மருத்துவ பயன் உடையது. கால்சியம் நிறைந்து இருக்கிறது. இதை சாப்பிடுவதால் சளி, இருமல், இரைப்பு, மண்டையில் நீர்கோர்த்தல், வாதம், பித்தம், காது மந்தம், இன்னும் பிறவற்றையும் சரி செய்யும்.
சுலபமாக எளிதில் செய்யலாம். குழந்தைகளுக்கு வித விதமாக செய்ய வேண்டி இருக்கும். இதை செய்து கொடுத்தால் அவர்கள் ஆவலாக சாப்பிடுவார்கள் . காலை மாலை டிபனுக்கு பொருத்தமாக இருக்கும்.
சுக்கினி வெளிநாடுகளில் நிறைய கிடைக்கின்றன.
நீர் சத்து மிகுந்த காய். எளிதில் வெந்து விடும். பார்க்க வெள்ளரி போல் இருக்கும். மெக்னீஸியம் அதிக அளவு இருக்கிறது.
நாட்டுக் கொண்டக்கடலையை நாம் முழுதாக பயன் படுத்தும் போது அதனை நாம் தோலுடன் உண்கிறோம். நார்சத்து இதனால் கிடைத்து விடுகிறது.
இந்த கொண்டக்கடலையில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.
மேலும் இந்த கொண்டக்கடலை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், பழங்கள் மற்றும் காய்கறிகள் மூலம் கிடைக்கும் சத்துக்களைப் பெறலாம். இங்கு ப்ரௌன் நிற கொண்டக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ப்ரௌன் நிற கொண்டக்கடலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவை உடல் எடை குறைய உதவி புரியும். அதிலும் இதனை தினமும் 1/2 கப் வேக வைத்து சாப்பிட்டு வந்தால், வயிறு நிறைவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல், அதனால் கண்ட உணவுப் பொருட்களை உட்கொள்ளாமல், உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்கலாம்.