Tuesday, 23 December 2014

தாய்வீடு அழைக்கிறது...!!!


தாயின் மடியில்லை
தாய்வீடு அழைக்கிறது...
அமைதியான இல்லமாகி விட்டது...
ஆர்பாட்டம், ஆரவாரமில்லை

ஆ...வென நடுவாசல்...
ஆகாயம் பார்த்து கிடக்கிறது...
நினைவலைகளை மேலே
தேடுகிறதோ...?


Sunday, 21 December 2014

முள்ளங்கி சுவைக் குழம்பு

சாம்பாருமில்லை...!!!
குழம்புமில்லை...!!!

முள்ளங்கி சுவைக் குழம்பு...!!!    ???

அட இது என்ன புதுக்கதையாவுல்ல இருக்கு...???

கதை அப்படின்னா சுவை தானே...ஹிஹிஹி...

நகைச்சுவை... சிரித்துக்கிட்டே போகலாம் உள்ளே...



கவிதை

மைதிலி கஸ்தூரி ரங்கனின் -  ''வின்சியோடு ஒரு நாள்'' என்னும் சிறுகதை பதிவிற்கு நானிட்ட கருத்து கவிதையை இங்கு பகிர்ந்துள்ளேன்




Saturday, 20 December 2014

சூரியோதயமும் 8வது மாடியும்...!!!

சூரியோதயமும்...கவிதையும்...!!!



அக்டோபர் மாதம் பால்கனியில் காலை உலா...
அப்போது கண்டேன்...
சூரியோதயம்...

Thursday, 18 December 2014

மல்டி பொரியல்






உடல்தேர் களைந்து ஓடிடவே...

பாடல் : மெட்டு : பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ..
 



பஜனைப்பாடல் கேட்கிறது
கால்கள் ஏனோ நிற்கவில்லை
உடலும் மனமும் ஒன்றாகி
உன்நினைவில் அது ஆடுது

Wednesday, 10 December 2014

இஞ்சி ரசம்


தடுமன் பிடித்து இருக்கா...? சளியா...இல்லை சளி பிடிக்கிற மாதிரி இருக்கா....காய்சலா...?

ஒரு நிமிடம்...நில்லும்மா...என்ன நீ பாட்டுக்கு வரிசை கட்டி சொல்லிகிட்டே இருக்க...

இல்லங்க வந்து.... இந்த ரசம்.... அது எல்லாத்துக்கும் நல்லா கேக்கும்னு சொல்ல வந்தேன்...அடடே...உங்களுக்கே தெரியுமா...?

So Sorryங்க   நான்  மூச்சு விடலை... ok...வா...

ம்ம்...

சரி  மேட்டருக்கு வரேன்....




இந்த குளிர் காலத்துக்கு ஏற்ற ரசம்.

Thursday, 4 December 2014

ஓட்ஸ் பாயாசம்

என்னங்க திடீர் விருந்தாளியா...கவலையை விடுங்க...அசத்திடலாம் நிமிஷத்தில....இனிப்பை....

நாளை கார்த்திகை தீபம் இல்லையா... பண்ணலாம் பாயாசம்...வாங்க




நீவந்திடு என் முன்னாலே

பாடல்



கிருஷ்ண மோகன பரப்பிரம்மதாரி
ராதா மோகன பிரியதாரி
கேசவ மாதவ சியாமமுராரி
ஆயரை காத்த கிரிதாரி

லிப்ட் - 2



மேலே சென்றது இப்போ கீழ் தளத்துக்கு வந்து விட்டது. அப்போது கதவு திறந்தது….ஆஹா..வெளியில போகலாம் என நினைக்கும் போது தான்…..ஆ…. அப்படியே எனக்கு பயம் உச்சிக்கு போய் விட்டது.

லிப்ட் - 1 - படிக்காதவர்கள் இதை கிளிக் செய்து படித்து விட்டு தொடருங்கள்...

Tuesday, 2 December 2014

லிப்ட் - 1



மாலை வேளை…
அந்த 8 மாடி கட்டடம் முன்பாக டாக்ஸி வந்து நின்றது.  அதிலிருந்து நால்வர் இறங்கினர். பாவம் அப்போது அவர்களுக்கு தெரியாது கொஞ்ச நேரத்தில் நமக்கு வாழ்நாள் மறக்க முடியாத ஒர் அனுபவம் கிடைக்கும் என்று.

கணவன், மனைவி, கல்லூரி செல்லும் அவர்களது இளைய மகள் மற்றும் அதே கட்டடத்தில் வசிக்கும் நண்பரின் மனைவி. இவர்களே அந்த நால்வர்.

Monday, 1 December 2014

யோகி ராம்சுரத்குமார் சுவாமிகளின் ஜெயந்தி தினம்

திருவண்ணாமலை வாழ் சுவாமிகளின் 96 வது பிறந்த நாள்  டிசம்பர் 1

அனைவருக்கும் அவரின் ஆசிகள் கிடைக்கட்டும்.

                                                                       அதிஸ்டானம்


Thursday, 20 November 2014

பருப்பு சாதம்

பருப்பு சாதம்....கண்டிப்பா சின்ன வயசுல சாப்பிட்டு இருப்போம்.
சாந்தமான, சத்தான உணவு இல்லையா...? அந்த பருப்பு வாசமும், நெய்யின் மணமும் சும்மா கும்முன்னு இருக்கும் இல்ல. பெரியவர்களுக்கும் அது பிடிக்கும்.
குழந்தைகளுக்கு பருப்பு சாதம் கொடுப்போம். நாமும் அது போலும் சாப்பிடலாம்...இல்லை என்றால் நமக்கா இதைப் பண்ணி சாப்பிடலாம்.

சுலபமாக, சத்தாக...விரைவாக செய்து சாப்பிடலாம்.



ஆத்மா ராமா






கண்கள் மூடிட நிழலாடும்
காவிய நாயகன் திவுருவம்
மெய் மேனி நிஜமாகும்
மெய்யே அவன் நிஜமாகும்
கல்வி கேள்வி தேவையில்லை
கண்டால் போதும் மனமதுவே

Tuesday, 18 November 2014

பொழுது புலர்ந்தது…!!!


           பறவைகளின்  க்ரீச்..  க்ரீச்…  சத்தம்.  பொழுது  புலர்கிறது. அதிகாலை வேளையில்  அச்சத்தம்  இனிமையாக  கேட்கிறது. விழித்தும்  எழ மனமில்லாமல்  பறவைகளின்  அந்நாளின் வரவேற்பைக் கேட்டவண்ணம்  படுத்துக்  கிடப்பது  தனி  சுகம். விடுமுறை நாள் என்றால்  கேட்கவே  வேண்டாம்.


Monday, 17 November 2014

ஒரு கோப்பை குளம்பி


காப்பி பிரியர்களே....வாருங்கள்

ஒரு கோப்பை குளம்பி அருந்தலாமா...?

நீ கூப்பிட்டுவிட்டாய்....காப்பின்னு வேற சொல்லிட்ட...அப்புறம்...அது வந்து

என்ன காப்பிம்மா...

புரூ காப்பியா...இல்லை..சன்ரைஸா...வேற ....ம்ம்....நெஸ்கேப் என்ன கரைக்கிட்டா...இரு.. இரு...பில்டர் காப்பி....?


சுவைத்துக் குடிக்கையில்...அஹா...அந்த நிமிடங்கள்....பிலீஸ் தொந்தரவு செய்யாதீர்கள்....




நீ என்ன சும்மா இல்லாமா இப்போ ஆசையை கிளப்பிட்ட... என நினைப்பவர்கள் ....

ஒருகையில் காப்பியுடன் படிக்க... 


Saturday, 15 November 2014

இனிப்பு & உப்பு ஆப்பம்












ஆப்பம் சாப்பிட
ஆசையா...
அன்புடன் சுவைக்க
ஆசையா...


இனிப்பு உப்பு ஆப்பத்தை
தேங்காய் பாலில் ஊறவிட்டு
திகட்டிட உண்ண
ஆசையா...

ஓட்ஸ் குழிப்பணியாரம்

ஒரு சத்தான குழிப்பணியாரம்.

இப்போ ஓட்ஸை நிறைய பயன் படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

எளிய, விரைவாகவும் புது மாதிரியாகவும் சாப்பிடலாமா...?




Friday, 14 November 2014

உலா போகும் நேரம்...!!!




நிலவு
உலா போகும் நேரம்

சூரியன்
குடைக்குள் மறைந்தான்

Thursday, 13 November 2014

ராஜ்மா தக்காளி தோசை


இலயிப்போமா....!!!


பாடல்கள் சிலவற்றை நாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கும்

நாமாவளி பாடல்கள் நம் மனதை கரைத்து விடும்.

அதன் இனிமையை சுவைத்து தான் உணரமுடியும்.

கேளுங்களேன் ...


கண்ணன் பாடல்


கதைக்குள் கதையாய் யுறைந்தாயப்பா பாகவத்தில்
கவர்ந்திட்டாய் நாளுமெனை மறந்து கிடக்க
காதுதுடிக்கிறது கேளா திருந்திட்டால் என்செய்வேன்
காதுகுளிர நாளும்கதை கொடு

Wednesday, 12 November 2014

விழித்தல்...!!!


உலகைப் புரிய வைத்த
உறவுகளுக்கு ஒரு கோடி நன்றிகள்

சூழலைப் புரிய வைத்த
சுற்றி இருப்பவர்களுக்கு ஒரு கோடி நன்றிகள்

மாற்றிமாற்றிப் பேசி மாறாத ஒன்றைப் புரிய வைத்த
மற்றவர்களுக்கு ஒரு கோடி நன்றிகள்

Tuesday, 11 November 2014

தேங்காய் சாதம்

நாம எப்பவும் செய்றது தான்  இல்லையா...






மென் சுவாசம் விட...!

நாற்பதுக்கு மேலே
நாடிவருமொரு தனிமை
நலமோ…? பெண்மைக்கு
உடல்தரும் இம்சை...

கொஞ்சிய குழந்தைகள்
விடலைகளாய் வளர்
விஞ்சிய பொழுது 
விரயமாய் நிற்க யாம்
தஞ்சிய நேரம் 
தழுவும் சோம்பலை

திடீரென ஓய்வு 
திகட்டும் இனிப்பாய்...



Monday, 10 November 2014

கேரட் கீரை சப்பாத்தி

கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் சப்பாத்தி.

புதுமையான வெரைட்டி..

அத நாங்கல்ல...சொல்லனும் அப்படீங்கறீங்க...? அதுவும் சரிதான்.

ஒரு எட்டு பார்க்கலாமா..?




Sunday, 9 November 2014

வானத்தின் முகவரி



முகவரி மாறியது
வானத்தில்
மழை.

கையில் கடிதம்
தட்டியது கதவை
இடி

Wednesday, 5 November 2014

பாலாஜிக்கு பா இரண்டு

இன்று இரண்டு பாடல்கள்.
பாமாலை பாடல் 1



எண்ணில் அடங்கா ஏழுலகில் அடங்கா
தண்ணில் அடங்கும் அவன் தாள்படிவாய்
கண்ணில் நிறைவான் கருத்தில் உறைவான்
சுவைவாய் அவன் பெயர் மொழி

விடுகதை - 6

என்னங்க ....சின்னப்புள்ளையா இருந்தப்ப நாம எல்லோரும் விளையாடுவோம் இல்ல......

இப்ப இது மாதிரியில்லாம பஸில்ஸ் அப்படின்னு ஆடுறாங்க...

இந்த மாதிரி விளையாட்டின் போது மொழி உச்சரிப்பும்,புது புது வார்த்தைகளும், கவிதை நயம்மும், நாட்டுப்புற பாடல்களும் என தானாவே கற்றுக் கொள்ளும் படி இருந்தது.

நல்லா யோசிப்போம்....சந்தோஷமாக இருக்கும்...இல்ல



Tuesday, 4 November 2014